தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு 500 நாற்காலிகள் புதுச்சேரி தமிழ் அமைப்புகள் வழங்கின! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:43

கடந்த 31-01-2015 காரிக்கிழமை காலை புதுச்சேரியி­ருந்து பாவலர்கள், புலவர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட 55 பேர் தனிப் பேருந்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வந்தனர். முற்றத்தின் முத்தமிழ் அரங்கில் பாட்டரங்கம் தொடங்கியது. ஐந்து வெவ்வேறு தலைப்புகளில் ஐந்து அமர்வுகளாகப் பாட்டரங்கம் நிகழ்ந்தது.

"முள்ளிவாய்க்கால்; முடிவல்ல, தொடக்கம்'' என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்விற்குப் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா தலைமையேற்றார். கலைமாமணி கோவி.க­யபெருமாள், பைந்தமிழ்ப்பாவலர் நல்ல.வில்­யன், தரும.இரத்தினவேலு, மணிமேகலை குப்புசாமி, சு.சொக்க­ங்கம், பாவலர் அசோகா.சுப்ரமணியன், பைந்தமிழ்ப்பாவலர் இரா.இளமுருகன் ஆகியோர் பாடல்களை வழங்கினர்.

"சாதி-மதச் சழக்கறுப்போம்'' என்ற தலைப்பில் தமிழ்மாமணி துரை.மா­றையன் அவர்களின் தலைமையில் நடந்த இரண்டாம் அமர்வில் செ.இராம­ங்கன், திருவேங்கடம், பாவலர் புதுவை யுகபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

"தமிழுயரத் தானுயர்வான் தமிழன்'' என்ற தலைப்பில் புலவர் அரங்க.நடராசன் தலைமையில் நடந்த மூன்றாம் அமர்வில் பாவலர் சு.சண்முகசுந்தரம், முனைவர் செல்வகுமாரி, ஆறு.செல்வன், பாவலர் வெ.கிருட்டினக்குமார், வ.விசயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

"தாய்மொழிக் கல்வியே தகைமிகு கல்வி'' என்ற தலைப்பில் முனைவர் சு.வேல்முருகன் அவர்களின் தலைமையில் நடந்த நான்காம் அமர்வில் முனைவர் சிவ.இளங்கோ, இரா.தேவதாசு, பொன்.அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

"பகை முடித்துப் பாதை காண்போம்'' என்ற தலைப்பில் கலைமாமணி பூங்கொடி பராங்குசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஐந்தாம் அமர்வில் வேணு. ஞானமூர்த்தி, அரங்க விசயரங்கன், நெய்தல் நாடன் ஆகியோர் பங்கேற்றனர்.

பாட்டரங்கம் முடிந்த பின்னர், முள்ளிவாய்க்கால் முற்ற அரங்கிற்கு நாற்கா­களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு தொடங்கியது. புதுவை மாநில தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவரான திரு. பெ.பராங்குசம் வரவேற்புரை யாற்றினார். உலகத் தமிழர் பேரமைப்பின் செயலரும், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான திரு. ந.மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவரான புலவர். கி.த.பச்சையப்பன் , தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அயனாவரம் சி.முருகேசன், முற்றப் பொறுப்பாளர் சான்.கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உருபா இரண்டு இலட்சம் பெறுமானமிக்க 500 ஞெகிழி நாற்கா­களை புதுச்சேரி மாநிலத் தமிழ் அமைப்பினர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு.பழ. நெடுமாறன் அவர்களிடம் நன்கொடையாக வழங்கினர். நாற்கா­களைப் பெற்றுக்கொண்டு ஐயா அவர்கள் ஏற்புரை வழங்கினார். கலந்து கொண்ட தமிழன்பர் அனைவருக்கும் துண்டு போர்த்தி சான்றிதழ் வழங்கினார். மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடும், மன நெகிழ்வோடும் இவ்விழா நடைபெற்றது. பகல் உணவு முற்றத்திலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்க முதல் முடிவுவரை ஐயா அவர்கள் உடனிருந்ததும் , அனைவரிடமும் அளவளாவியதும் அனைவரையும் நிறைவு கொள்ளச் செய்தது.
விழா முடிவாக தமிழர் தேசிய முன்னணியின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு.வைத்தியநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.