நெல்லைத் தோழர்கள் விடுதலை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:56
திருநெல்வேலியில் சட்டமன்ற நகல் எரிப்புப் போராட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் அ.சு. முருகன், செயலாளர் பொதிகை சுந்தரம், இளைஞரணி மாநகர அமைப்பாளர் மு. இசக்கிப் பாண்டியன், செயலாளர் ப. முருகேசன், தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் பெ. காலாடி, தூத்துக்குடி நகர தமிழர் தேசிய இயக்கச் செயலாளர் ம.மு. தமிழ்நேயன், இளைஞரணிச் செயலாளர் முத்துராசா ஆகியோர் ஈடுபட்டனர்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டதை மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு பினையில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இவ்வுத்தரவுப்படி சிறைவைக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்காக மூத்த வழக்குரைஞர்கள் மு.ப. அழகியநம்பி, மு. சுப்புரத்தினம், இளைய வழக்குரைஞர் சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.

விடுதலை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தினர்களை இளைஞரணி அமைப்பாளர் அ. வியனரசு, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சு.க. மகாதேவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அ. துரையரிமா மற்றும் ஈ. தமிழீழன், ந. தமிழரசன், செய்யது மசூது, ச. தமிழ்த் தேசியன், கு. பகலவன் உள்ளிட்ட தொண்டர்கள் சிறைவாயிலில் கூடிநின்று வரவேற்றனர். போராட்ட அன்று கைதுசெய்யப்பட்டு மாலையே விடுதலை செய்யப்பட்டவர்கள்: அ. வியனரசு, சு.க. மகாதேவன், அ. துரையரிமா, ந. தமிழரசன், வெ. பிரபாகரன், நாம்தமிழர் செளந்திரபாண்டியன், ப. நாராயணன், குமார்த் தமிழன், ஈ. தமிழீழன் மற்றும் பலர்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.