ஐ.நா. விசாரணை ஆணையம் அறிக்கை ஒத்திவைப்பு -தமிழர் தேசிய முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015 13:14

இலங்கையில் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படு கொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த குழுவின் அறிக்கை வெளியிடப் படாமல் ஆறு மாத காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதைக் கண்டித்து 13-03-2015 வெள்ளிக்கிழமை அன்று சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய மூன்று மாநகரங்களில் தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழர் தேசிய முன்னணியின் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களும் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், அனைத்து அமைப்புகளைச் சார்ந்த திரளான தோழர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டனர்.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் அய்யநாதன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் ம. பொழிலன், தமிழர் எழுச்சி இயக்கத் தலைவர் வேலுமணி, தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் மு. இராமச்சந்திரன், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் க. அதியமான், தமிழர் பேரரசுக் கட்சித் தலைவர் கெ. கணேசன், தமிழ் மீட்பு இயக்கத் தலைவர் அ.சி. சின்னப்பா, தமிழ்த் தேசியக் குடியரசுத் தலைவர் செந்தமிழ் வாணன், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் செள. சுந்தரமூர்த்தி, அறிவாயுதம் இதழாசிரியர் அமர்நாத், தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் க. தமிழ்வேங்கை, மாநில மாணவரணி அமைப்பாளர் செயப்பிரகாசு, கடலூர் மாவட்டத் தலைவர் பழமலை உட்பட திரளானவர்கள் கலந்துகொண்டார்கள்.

தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர்களான புலவர் கி.த. பச்சையப்பன், முனைவர் அருகோ, புலவர் இறையெழிலன், பொதுச்செயலாளர்கள் செ.ப. முத்தமிழ்மணி, ந.மு. தமிழ்மணி, வ.கெளதமன், புதுவை தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் பராங்குசம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களும் திரளாகப் பங்கெடுத்துக்கொண்டனர். வடசென்னை மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் மகளிர் அமைப்பாளர் லில்லிமேரி தலைமையில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடசென்னை மாவட்டத் தலைவர் ச. இலாரன்சு தலைமையில் அம்மாவட்டத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக அனைவருக்கும் ச. இலாரன்சு நன்றி தெரிவித்தார்.

மதுரை

மதுரையில் மீனாட்சி பசாரில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழர் தேசிய முன்னணியின் மாநகர் மாவட்டத் தலைவர் வெ.ந. கணேசன் தலைமையில் நடைபெற்றது. பு.இரே. துவாரகநாத், கெ. இராமசுப்பு, சீ.வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் தேசிய முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.ஆர். மாணிக்கம், மரு. பொ. முத்துச்செல்வம், ஜி.எஸ். வீரப்பன், சி.சி. சாமி, பொதுச்செயலாளர் கா. பரந்தாமன், மதசார்பற்ற ஜனதாதளம் பொதுச் செயலாளர் கா. ஜான்மோசஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆர். ஜெயராமன், தமிழ்த் தேசியப் பேரியக்கம் மாநகர் செயலாளர் இரெ. இராசு, பேரா. கு. வேலன், ச. பிச்சைக்கணபதி, தமிழ் தமிழர் இயக்க மாநிலப் பொறுப்பாளர் பரிதி, மார்க்சிய- இலெனினிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சோ. ஆரோக்கியமேரி, தமிழ்த்தேசிய விடுதலைஇயக்கம் மாவட்டப் பொறுப்பாளர் கதிர் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

திண்டுக்கல் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ச. தமிழ்மாறன், திருப்பத்தூர் வாத்தியார் இராமன், சிவகங்கை மாவட்டத் தலைவர் வெ. சோமசுந்தரம், அருணாசுந்தரராசன், சிவகாசி பி. முருகேசன், ஆல்பர்ட் இராசா, செல்வ அரசு, முகிலன், சிவனாத் பாபு, கா. செண்பகமூர்த்தி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மரு. க. கண்ணன், அன்சாரி, தேசியமணி, ப. தங்கமணி, வெ. கிருஷ்ணமூர்த்தி, மு. அழகர்சாமி, ந. ஞானப்பிரகாசம், பெ. கிருஷ்ணமூர்த்தி, கெ. பாலசுப்பிரமணியம், சீ. நாகராசன், கல்யாணசுந்தரம், வி. வேல்முருகன் உள்பட திரளான தோழர்கள் பங்கேற்றனர். மாநகரச் செயலாளர் தி. முருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தமிழர் தேசிய முன்னணி சார்பில் தஞ்சையில் இரயிலடி முன்பாக காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர்தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஐயனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணியின் தஞ்சை மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் இரா. பாரதிச்செல்வன், நாகை மாவட்டத் தலைவர் சாமி. தமிழரசன், கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், நாகை மாவட்டத் தலைவர் சாமி. தமிழரசன், திருச்சி மாவட்டத் தலைவர் நெ. புவனேசுவரன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீராண்டன், அரியலூர் மாவட்டத் தலைவர் இரா. அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின்மாவட்டச் செயலாளர் இரா. திருஞானம், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர் குழ. பால்ராஜ், இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில அமைப்பாளர் அருண். மாசிலாமணி, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் சபேசன், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் சதா. முத்துகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் புலவர். துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார்.

மற்றும் தமிழர் தேசிய முன்னணியின் நிர்வாகிகள் - மாநிலப் பொதுச் செயலாளர் தி.ம. பழனியாண்டி, மாநிலத் துணைத் தலைவர் சி. பொன்னிறைவன், மாநில இளைஞரணி அமைப்பாளர் தியாக. சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மு. முருகையன், மாவட்டப் பொருளாளர் அ. இருதயராஜ், சி.பி.ஐ. நகரச் செயலாளர் எஸ்.எம். இராசேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் ஜெ. கலந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சையில் அனைவரையும் ஒருங்கிணைத்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏஐடியூசி மாவட்டத் துணைச் செயலாளர் துரை. மதிவாணன் நன்றி கூறினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.