தமிழர் தேசிய முன்னணியில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்தனர் - தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சிமிகு நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 மே 2015 14:28

26.04.15 ஞாயிற்றுக்கிழமைஅன்று பிற்பகல் 3 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றத் தமிழர் தேசிய உணர்வாளர்கள் கூட்டத்தின் போது கீழ்க்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு தமிழர் தேசிய முன்னணியில் இணைந்தனர்.

இணைந்தவர்கள் அனைவரையும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் வரவேற்று,தமிழர் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், சர்வதேச ஊடகவியலாளருமான அய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மாறன், முன்னாள் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கண். இளங்கோ, திருமுருகன், பாக்யராசு, முன்னாள் நீலகிரி மாவட்டச் செயலாளர் ஆனந்த், முன்னாள் ஈரோடு மாவட்டச் செயலாளர் செயராசு, முன்னாள் சென்னை பொறுப்பாளர்கள் ஆவல் கணேசன்,உதயகுமார்,திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் புழல் முனியாண்டி, விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் திருமதி சாயிரா, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கமலதாசன், சபேசன், செங்கோட்டை அன்வர் பாலசிங்கம், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தலைமை நிலையப் பேச்சாளர் செயசீலன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் தமிழர் தேசிய முன்னணியில் இணைந்தனர்.

திருச்சி வழக்கறிஞர் பானுமதி,அவரது கணவர் ஆத்மநாதன் ஆகியோரும் தமிழர் தேசிய முன்னணியில் இணைந்தனர். மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றிலிருந்தும் பலர் இணைந்தனர்.

புதிதாக இணைந்தவர்கள் தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகக்குழு, மாவட்ட நிர்வாகக்குழு ஆகியவற்றில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பழ. நெடுமாறன்அறிவித்தார்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.