2015 மே 18 மாலை சரியாக 4.00 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் உரையாற்றி தொடக்கிவைத்தார். புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம. நடராசன்அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும், உலகத்தமிழர் பேரமைப்பின் செயலாளர் நாயகம் கோ. இளவழகனார், துணைத் தலைவர் பொன்னிறைவன், முள்ளிவாய்க்கால் முற்றத்தின்அறங்காவலரும், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான ஐயனாபுரம் சி. முருகேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதிலும் திரளான இன உணர்வாளர்களும், பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும், பேராசிரியர்களும், மாணவர்களும், மகளிரும் கலந்துகொண்டனர்.
தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் சதா. முத்துகிருட்டிணன், மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன், மரு. பாரதிசெல்வன்,சாமி. தமிழரசன் மற்றும் திரளான கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவர் பேரா. பெ. இராமலிங்கம் மற்றும் இலக்கிய முற்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 6 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மெழுகு தீபம் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடந்த கடற்கரையிலிருந்து எடுத்து வரப்பட்ட குருதி தோய்ந்த மண்ணிற்கு பூ தூவினர்.
நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தமிழினி எனும் குறும்படம் வெளியிடப்பட்டது. இத்துடன் நினைவு நாள் நிகழ்வு நிறைவுற்றது. |