உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு தஞ்சையில் தமிழர் திரண்டனர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூலை 2015 14:39

உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாடாக உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சூன் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

DCM 0545

கொடியேற்றம்
காலையில் 9 மணிக்கு மங்கல இசை தொடங்கியது. பிறகு உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் நாயகம் கோ. இளவழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முனைவர் தாயம்மாள் அறவாணன் உலகத் தமிழர் கொடியை ஏற்றிவைத்தார். கூடியிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர்.
தொடக்கவுரை
தமிழீழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தொடக்கஉரை நிகழ்த்தினார். உணர்ச்சிகரமான அவரது உரையின்போது மண்டபமே அதிரும்படி கையொலி எழுந்த வண்ணம் இருந்தது.
மாணவர் அரங்கம்
செயப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற மாணவர் அரங்கை பி.ஜோ. பிரிட்டோ தொடக்கி வைத்தார். செம்பியன் பா. கார்த்திக்,
பா. பாரதிதாசன், செல்வி. இரா.மணிமொழி ஆகியோர் பேசினர்.
உலகத் தமிழரும் ஐ.நா.வும்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாங்கள் உரையாற்றிய விவரங்களை பூங்குழலி, அங்கயற்கண்ணி ஆகியோர் எடுத்துரைத்தனர்.
பறிபோகும் தமிழர் வளங்களும் உரிமைகளும்
இந்த அரங்கிற்கு முனைவர் த. செயராமன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் த. பானுமதி தொடக்க உரை நிகழ்த்தினார். காவிரி உரிமை பற்றி பெ. மணியரசன், அணுஉலைகள் குறித்து சுப. உதயகுமார் ஆகியோர் உரையாற்றினர். அதற்குப் பிறகு இடைவேளை விடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.
அயலகத் தமிழர்
இந்த அரங்கிற்கு கருநாடகத்தைச் சேர்ந்த கு. புகழேந்தி தலைமை தாங்கினார். எழுகதிர் ஆசிரியர் அருகோ தொடக்கி வைத்தார். மராட்டியத்தைச் சேர்ந்த நாடோடித் தமிழன், கணேசன், கேரளத்தைச் சேர்ந்த முத்துராமன் ஆகியோர் உரையாற்றினர்.
மலர் வெளியீடு
புலவர் கி.த. பச்சையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கிற்கு புலவர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். முனைவர் பெ. இராமலிங்கம் மாநாட்டு மலரை வெளியிட்டார். ச. சவுந்திரபாண்டியன், புலவர் இரத்தினவேலன், சிமியோன் சேவியர்ராஜ் உட்பட பலர் மலரை பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் அறிவரசன் எழுதிய "ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டு ஆண்டுகள்' என்ற நூலை ம. சாமிநாதன் வெளியிட பா. இறையெழிலன், சதா.முத்துக்கிருட்டிணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் அறிவரசன் ஏற்புரை நிகழ்த்தினார்.
சீ. அருண் எழுதிய "சயாம்-பர்மா மரண இரயில்பாதை' என்னும் நூலை மரு. பாரதிசெல்வன் வெளியிட, பொன். வைத்தியநாதன், துரை. மதிவாணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
திருக்குமரன் எழுதிய விழுங்கப்பட்ட விதைகள் என்னும் கவிதை நூலை தமித்தஇலட்சுமி தீனதயாளன் வெளியிட மா. பொன்னிறைவன், கோ. திருநாவுக்கரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விஜயகுமார் ஏற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்-தமிழர் அன்றும் இன்றும்
முனைவர் க. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை முனைவர் கோ. கணேசமூர்த்தி தொடக்கி வைத்தார். முனைவர் தொ. பரமசிவம் என். முருகன், இ.ஆ.ப., கா. அய்யநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவரங்கம்
பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கிற்கு மு. பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முனைவர் தமிழண்ணல், முனைவர் ச.வே. சுப்பிரமணியம், முனைவர் க.ப. அறவாணன் ஆகிய மூத்த தமிழறிஞர்களுக்கு உலகப் பெருந்தமிழர் விருதுகளை பழ.நெடுமாறன் அளித்தார். அரங்கமே ஆரவாரம் செய்தது.

virudhu

முனைவர் ம. நடராசன் அவர்களுக்கு "தமிழ் கலைமாமுகில்' என்னும் விருதினை பழ. நெடுமாறன் அளித்தார்.

DCM 0564 copy
உடல்நலக்குறைவின் காரணமாக உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெறுவதற்கு வரஇயலாத நிலை குறித்து இரா. செழியன் கடிதம் அனுப்பியிருந்தார்.
தொடக்கத்திலிருந்து விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொறுப்பினை ந.மு. தமிழ்மணி, இயக்குநர் வ. கெளதமன், வீ. இறையழகன் ஆகியோர் திறம்பட செய்தார்கள்.

விருதுகளைப் பெற்றவர்களின் சாதனைப் பட்டியலையும், அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் குறித்தும் முனைவர் அரணமுறுவல், ஆவல் கணேசன், மதுரை. வரதராசன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இறுதியாக அய்யனாபுரம் சி. முருகேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
(மாநாட்டில் பேசிய தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் உரைகள் அடுத்தடுத்து வெளிவரும் இதழ்களில் இடம்பெறும்)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.