ஏழைகளுக்குக் கல்வி மறுக்கும் கொள்கை! பொறிஞர் கோ. திருநாவுக்கரசு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 13:24

கோத்தாரி ஆணையம் பரிந்துரைத்த (1964-1966) இலவச கட்டாய (தொடக்க)க் கல்வி

குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையிலேயே பள்ளி அமைய வேண்டும். அனைத்து மாணவர்களும் சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் இந்த அண்மைப் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தில் தாய்மொழி வழியாகவே பயில வேண்டும். மற்றவர்களை ஏற்பது உள்ளிட்ட உயரிய மானிடப் பண்புகளை வளர்க்கும் இடங்களாக இப்பள்ளிகள் அமைய வேண்டும். கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகள் தெளிவானவை. வளர்ந்த நாடுகளில் உள்ள தொடக்கக் கல்வி முறையை ஒத்தவை. கல்வியாளர்களால் பெரிதும் ஏற்கப்பட்டவை. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கல்விமுறையை நடைமுறைப்படுத்தவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009

இறுதியாக 2009ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட கூடஞு கீடிஞ்டt ணிஞூ இடடிடூஞீணூஞுண tணி ஊணூஞுஞு ச்ணஞீ இணிட்ணீதடூண்ணிணூதூ உஞீதஞிச்tடிணிண அஞிt ணிணூ கீடிஞ்டt tணி உஞீதஞிச்tடிணிண அஞிt (கீகூஉ) கல்வி பெறும் உரிமைச் சட்டம் பற்றி கூறவேண்டும். இலவச கட்டாயக் கல்வி பெற குழந்தைகட்கு உள்ள அடிப்படை உரிமை நிறுவப்பட்டது.

2010 ஏப்ரல் மாதம் 1 அன்று இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொண்ட 135 நாடுகளில் ஒன்றாக இந்தியா ஆனது. இந்த சட்டப்படி 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையானது.

தனியார் பள்ளிகளிலும் 25% இடங்களை இடஒதுக்கீடு முறையில் ஒதுக்கவேண்டும். நன்கொடை அனுமதிக்கட்டணம் போன்றவை அனுமதிக்கப்படாது. குழந்தைகளையோ பெற்றோர்களையோ பள்ளியில் சேர நேர்காணல் செய்யக்கூடாது.

தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தக் குழந்தையையும் ஒரே வகுப்பில் ஆய்வு செய்து, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவது கல்வியை நிறைவு செய்வது அரசின் பொறுப்பு.

பள்ளியின் கட்டமைப்பு, ஆசிரியர்-மாணவர் விகிதம், ஏனைய வசதிகள் பற்றி இச்சட்டம் வலியுறுத்துகின்றது.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூபாய் 23100 கோடிகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையில் 70% இந்திய அரசும் 30% மாநில அரசுகளும் செலுத்த வேண்டும்.

(தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் - பக்கம் 45, 46)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.