பள்ளிக் கல்வி பிரச்சனைகளும், தீர்வுகளும் - பேரா. ப. கல்விமணி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 13:54

1. செயல்வழிக் கற்றலைச் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. ஆசிரியர் மாணவர் விகிதம் 1,20 நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
4. சமச்சீர் கல்வியைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும்.

5. தமிழ்வழிக் கல்வியை அனைத்து நிலைகளிலும் செயல்படுத்த வேண்டும்.
6. மேல்நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். +2 வகுப்புகளை இளநிலைக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.
7. மருத்துவம், பொறியில் போன்ற தொழில் கல்வியிலும் அனைத்துப் பட்டப்படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
8. பார்த்தெழுதும் பண்பாட்டை ஒழிப்போம், கல்வித்தரத்தை உயர்த்துவோம்.
9. மேல்நிலைக் கல்வியில் இடஒதுக்கீடு ஆணையைச் சரியாக அமல்படுத்த வேண்டும்.
10. விதிகளுக்குப் புறம்பாகப் பணம் பறிக்கும் பள்ளி நிர்வாகிகள் மீதும் தனிப் பயிற்சி எடுக்கும் ஆசிரியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11. ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலப் பள்ளிகளுக்குத் தனியாக கல்வி இயக்குநரகம் வேண்டும்.
12. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும்.
13. அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
14. சிறப்புக் கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
15. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காட்டைக் கல்விக்காக ஒதுக்கீடு செய்க.

(தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் - பக்கம் 11)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.