தோழர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:21

1. இக்கோரிக்கைகளை விளக்கி இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் துண்டறிக்கையை அச்சடித்து தங்கள் மாவட்டத்தில் தலைவரின் பரப்புரைப் பயண வழிநெடுக பொதுமக்களிடம் வழங்க வேண்டும்.

2. தங்கள் மாவட்டத்தில் பயண வழியில் உள்ள ஊர்களில் பயணம் குறித்த சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

3. பயணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களைத் தவிர வேறு ஊர்களைப் புதிதாகச் சேர்க்க வேண்டாம்.

4. பயணத்தில் வழிநெடுக குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களில் தலைவருடன் வரும் வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியின் மூலம் தலைவரும் மற்ற நிர்வாகிகளும் பேசுவார்கள். அங்கெல்லாம் மேடை அமைக்க வேண்டியதில்லை.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மேடை அமைத்து, ஒலி பெருக்கி, விளக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். முன்னதாகவே கூட்டத்திற்கான அனுமதிக்கு எழுதிக்கொடுத்து காவல்துறையிடம் அனுமதியைப் பெற வேண்டும்.

5. தலைவருக்குப் பொன்னாடைகள், மாலைகள் அணிவிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப்பதில் கணிசமான தொகையை நிதியாகத் தரவேண்டும்.

இப்பயணத்தில் தலைவருடன் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆங்காங்கே கலந்துகொள்வார்கள். மாவட்ட நிர்வாகிகள் அவரவர்களின் மாவட்டங்களில் பங்குகொள்வார்கள்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.