இந்தியா எங்கும் இனி வாட்டர் கேட் டுகளா? |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00 |
1974ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அதிபராக இருந்த ரீகன் வாட்டர் கேட் ஊழலில் சிக்கித் தன் பதவியைத் துறந்தார்.
வாட்டர் கேட் ஊழல் என்பது, ஏதோ கையூட்டு (இலஞ்சம்) வாங்கியதோ, தன் கட்சியினருக்குச் சலுகை செய்ததோ அன்று.
வாட்டர் கேட் என்பது ஒரு விடுதியின் பெயர். அன்றைய அமெரிக்க எதிர்க்கட்சியான, மக்கள் நாயகக் கட்சியினரின் (ஈஞுட்ணிஞிணூச்tடிஞி கச்ணூtதூ) அலுவலகம் அங்கு இருந்தது. அந்த அலுவலகத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் களையெல்லாம், அவர்களுக்குத் தெரியாமல், அரசாங்கத்தின் உளவுத்துறை பதிவு செய்தது. அச்செய்கை, அன்றைய அதிபர் ரீகனின் அனுமதியோடுதான் நடைபெற்றது என்பது மெய்ப்பிக்கப் பட்டதால், அவர் தன் அதிபர் பதவியை இழக்க நேர்ந்தது.
தொலைபேசி உரையாடல்களைக் கள்ளத்தனமாகப் பதிவு செய்தல், மக்களாட்சி முறைக்கும், தனி மனித உரிமைக்கும் எவ்வளவு எதிரானது என்பதை அந்நிகழ்வு உணர்த்தியது.
ஆனால், இன்று பிறப்பிக்கப் பட்டிருக்கும் சட்டப் புறம்பான நடவடிக் கைகள் தடுப்புத் திருத்த அவசரச் சட்டம், 2004, அதை மிக எளிதாக ஆக்கி விட்டது.
இனி இந்தியா முழுவதும் வாட்டர் கேட் ஊழல்கள் நடைபெறும். ஆனால் எந்த ரீகனும் பதவி இழக்க வேண்டிய தில்லை.
|