1. ஈழத் தமிழர் படுகொலைக்குச் சர்வதேச நீதி விசாரணை, 2. எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை, 3. தமிழர் உரிமை நிலை நாட்டல், 4. அரசியலில் தூய்மை, 5. நிர்வாகத்தில் நேர்மை, 6. இயற்கை வளம் காத்தல், 7. மது ஒழிப்பு, 8. சாதி-மதவெறி ஒழிப்பு, 9. சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாவுமணி, 10. ஜனநாயக மீட்பு ஆகிய பத்து கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட எழுச்சிப் பயணம் 8-10-2015 அன்று நிறைவுற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சியை வட சென்னை மகாகவி பாரதி நகரில் தமிழர் எழுச்சிப் பயண நிறைவும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்டத் தலைவர் திரு. ச. இலாரன்சு தலைமையேற்றார்.
திருவாளர் வீ.மு. கோவிந்தன், கோ. தமிழேந்தி, க.பா. சீனிவாசன்,\ பெ. சுந்தரசேகர், ஏ.வே. சாய், கு. சீனு (எ) இரவிசங்கர், தோழர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு. கி. சண்முக சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. சே. பசீர் அகமது தொடக்கவுரையாற்றினார். சிறப்புரை : முனைவர் அருகோ மற்றும் செ.ப. முத்தமிழ்மணி, இயக்குநர் வ. கெளதமன், கா. அய்யநாதன், ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள். தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் நிறைவுரையாற்றினார். திருமதி மோ. லில்லிமேரி நன்றியுரை நிகழ்த்தினார். |