இளங்குமரன் தாயார் மறைவு பழ. நெடுமாறன் இரங்கல் செய்தி PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:32

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆரம்பக் காலத் தோழரும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராகப் பணியாற்றியவருமான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்னை செல்வநாயகி நடராசா அவர்கள் மறைந்த செய்தி அனைவருக்கும் வேதனை அளிக்கும் செய்தியாகும்.

தமிழீழம் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏழ்மையான அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தனது மூத்த மகன் இயக்கத் தொண்டாற்றி வருவதில் அவருக்குப் பெருமிதம் இருந்தது. போரின் முடிவில் இளங்குமரன் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். அவர் நிலை என்னாயிற்று என்பது தெரியாத துயரத்தோடு வாழ்ந்து வந்த அம்மையார் அந்த ஏக்கத்தோடு மறைந்திருக்கிறார். அந்த வீரத்தாய்க்கு தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.