பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்புத் திட்டம் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:19 |
நாடெங்கிலும் உள்ள மத்திய அரசின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மும்மொழிகளைக் கற்கும் திட்டத்தை மத்திய அரசு அமைத்த உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இத்திட்டத்தை அரசு செயல்படுத்துமானால் தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். சமஸ்கிருதத்தைக் கற்பதால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி போன்ற எதற்கும் சமஸ்கிருத கல்வி உதவிசெய்யாது. இந்தித் திணிப்பை தமிழகம் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடியது. இப்போது சமஸ்கிருதத் திணிப்பிற்கு எதிராகவும் அதைவிடக் கடுமையானப் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்படும் என இந்திய அரசை எச்சரிக்கிறேன். |