சிங்களச் சிறையில் 7 ஆண்டு காலமாக வாடும் - தமிழக மீனவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:10

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன், செண்பகம், நாகராஜ், அருண்குமார், சதீஷ் ஆகிய நான்கு பேரும் கடந்த 2007ஆம் ஆண்டு வழக்கம்போல மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதைப்போல செருது கிராமத்தைச் சேர்ந்த, சிவசுப்பிரமணியன், தென்பாதியைச் சேர்ந்த பாலகிருட்டிணன், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த குப்புசாமி, சீர்காழியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, கடலூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய ஐந்து பேரும் 2008ஆம் ஆண்டு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

பின்னர் மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் உதவி வழங்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது மேற்கண்ட 9 மீனவர்களும் அங்கு இருந்ததைக் கண்டுள்ளனர். இவர்கள் விடுதலையாகி வந்த பிறகு இந்த உண்மையை அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இப்போது இலங்கையில் உள்ள பூசா சிறையில் இவர்கள் இன்னமும் இருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே இவர்களை விடுவித்து தமிழகத்திற்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறோம்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.