14 ஆண்டு கால பொய் வழக்கு பரந்தாமன் விடுதலை |
|
|
|
திங்கட்கிழமை, 23 மே 2016 12:24 |
2002ஆம் ஆண்டு தலைவர் பழ.நெடுமாறன் பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது அவருடன் தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்களும் கைது செய்யப்பட்டார். பின்னர் "பொடா' மறு ஆய்வுக் குழுவின் ஆணையின் பேரில் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.
ஆனால், அவரது கோழிப்பண்ணையில் ஜெலட்டின் குச்சிகளைப் பதுக்கி வைத்திருந்ததாக பரந்தாமன் மீது போடப்பட்ட வழக்கு கடந்த 14 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களை அளிக்க அரசு முற்றிலும் தவறிவிட்டது. எனவே அவரை குற்றமற்றவர் எனக் கருதி இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். பொய் வழக்கில் இருந்து மீண்ட பரந்தாமன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள். |