இதோ இயற்கை மீத்தேன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:44

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை. 40 கிலோ என்றுகூட வைத்துக்கொள்ளலாம். நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்கப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி. கால அவகாசம் 30 வருடம். இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தின்மூலம் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.

இதற்காக ரூ.1850 கோடிகள் செலவாகும்.
இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை 1850 கோடியில் எடுக்க முடியும். கூடுதலாக கிடைக்கும் பலன்கள்.
1. பால் வளம் பெருகும்.
2. விவசாயிகள் வாழ்வு மேம்படும்
3. இயற்கை வளம் மேம்படும்
4. விவசாயம் செழிக்கும்.
5. முக்கியமாக சுற்றுச் சூழல் பாதிக்காது.
முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை. ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை. புரியாதவர்களுக்கு புரியவைப்போம்.

 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.