தமிழாய்ந்த தமிழன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

http://thenseide.com/images/Tamilkudimagan.jpgஇனிய நண்பர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி தமிழ் கூறும் நல்லுலகைத் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

மாணவப் பருவத்திலேயே தமிழன்னையின் தொண்டிற்குத் தன்னை முழுமையாக ஒப்பளித்துக் கொண்டு இறுதி மூச்சு உள்ளவரை அயராது பாடுபட்ட பெருமைக் குரியவர்.
பாவாணரோடு இணைந்து நின்று தனித்தமிழ் இயக்கத்தை வளர்த் ததில் சிறந்த பங்காற்றியவர். பெரியார் பற்றாளர். தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அனை வருடனும் நட்புறவு பூண்டு ஒழுகிய பண்பாளர்.

மதுரை யாதவர் கல்லூரி முதல் வராக விளங்கி அக் கல்லூரிக்குச் சிறப்புத் தேடித் தந்தவர். பல்கலைக் கழகக் குழுக்களில் அங்கம் வகித்து கல்வித்துறையில் முத்திரை பொறித்தவர்.

அரசியலில் ஈடுபட்டுப் பேரவைத் தலைவர், அமைச்சர் போன்ற பதவிகள் வகித்தாலும் பைந்தமிழ்த் தொண்டு, பகுத்தறிவுத் தொண்டு ஆகியவற்றை ஒரு போதும் மறவாது இயங்கியவர். அதனால் தமிழ்ப் பகைவர்களின் கடுமையான தாக்கு தல்களுக்கு ஆளான போதும் கொஞ்சமும் கலங்காதவர்.

அவரின் மறைவின் மூமூலம் சிறந்ததொரு தமிழ்த்தொண்டரைத் தமிழகம் இழந்துவிட்டது. ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆளாகியுள்ள அவர் துணைவியார் திருமதி. வெற்றிச்செல்வி அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-
ஆசிரியர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.