பேரா. த. செயராமன் பணி நிறைவு பாராட்டு விழா! |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:25 |
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி யில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் த. செயராமன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 7-6-12 அன்று மாலையில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேரா. எஸ். மணி தலைமை தாங்கினார். மோ. யோபு ஞானப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தி னார். ஆர்.எம்.எஸ்.சஜ்ஜல், என். இரவிச் சந்திரன், எஸ்.வி. பாண்டுரங்கன்,
ஏ. அமனுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி. செந்தில்வேல் முனைவர் கே. தியாகேசன், பேரா. நா. அழகப்பன், பேரா. கே. சூரியமூர்த்தி, ஆர்.ஆர். கண் ணன், பேரா. எஸ். சிவராமன், இரா. இராமனுஜம், முனைவர் சி. தாமஸ், கோவி. அசோகன், கவி. பாஸ்கர்,
இர. ரசீத்கான், பேரா. இரா. முரளீதரன், சுப்பு மகேசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பேரா. த. செயராமன் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக ரூ.25,000/-க்கான வரைவோலையை எஸ்.வி. பாண்டு ரங்கன் அளித்தார். ஆர்.எம்.எஸ். சஜ்ஜல் அதை பெற்றுக்கொண்டார்.
பேரா. செயராமன் அவர்களின் துணைவியார் திருமதி. சித்ரா ஆகி யோருக்கு ஏராளமான அமைப்புகளின் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டன. விழாவில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இறுதியாக
முனைவர் த. செயராமன் ஏற்புரை நிகழ்த்தினார்.
பேரா. த. செயராமன் அவர்கள் மீது அவருடைய முன்னாள் மாணவர் களும் இந்நாள் மாணவர்களும் எத்த கைய அன்பும் மதிப்பும் வைத்திருக் கிறார்கள் என்பதை இந்த விழா எடுத்துக் காட்டியது. விழாவில் கூடிய மாணவர் கள் பேராசிரியர் மீது அன்பினை அள்ளி அள்ளிச் சொரிந்த காட்சி அனைவரை யும் நெகிழவைத்தது. ஒரு பேராசிரியர் எவ்வாறு கடமையற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பேரா.
த. செயராமன் திகழ்ந்ததை விழாவில் பேசிய முன்னாள் மாணவர்களும் சக பேராசிரியர்களும் எடுத்துக்காட்டிப் பாராட்டினார்கள்.
விழா முடிவில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பேரா. க. மேனகா தொகுத்து வழங்கி னார். முனைவர் க. செந்தில்நாயகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
|
ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012 17:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |