பிரபாகரன் என்றதும் நெடுமாறன் நினைவுக்கு வருவார்! "முகம்' ஏடு பாராட்டு |
|
|
|
சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012 12:00 |
உலகின் பல தலைவர்கள் பற்றிய சிறந்த வரலாற்று நூல்களுள் ஒன்றாக "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூலை பழ.நெடுமாறன் படைத்துப் பிரபாகரனின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
வரலாற்று நூல் படைப்பவர் வரலாற்று நாயகனுடன் தன் நேரடித் தொடர்பு, தொடர் கடிதத் தொடர்பு, அவற்றிற்கு உறுதுணையான வரலாற்றுப் பதிவு ஆவணங்கள், புகைப்படங்கள், வரலாற்று நாயகனின் தத்துவம் சார்ந்த கொள்கைகள், கோட்பாடுகள், அதன் அடிப்படையில் தமிழீழம் அமைந்திட நேர்கொண்ட வீரம் செறிந்த போர் முறைகள், தந்திரங்கள், கொண்ட கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்ததுடன் தன் மனைவி, மக்கள் எனக் குடும்பம் முழுவதும் அர்ப்பணிப்புக்கு அணியமாக்கிக் கொண்டது என அனைத்தையும் துணை கொண்டு அரிய பெரிய நூலை இத்தமிழ்ச் சமூகத்திற்கும் உலகிற்கும் ஈந்துள்ளார். மறத்தமிழனின் வீரம் தமிழ்க் காவியங்களிலும், இலக்கியங்களிலும் விரவிக் கிடப்பதைப் படித்து வந்த தமிழ்ச் சமூகத்திற்குப் பிரபாகரன் தமிழீழப் போர் நடத்தியதைக் காட்சிகளாகக் காட்டி மெய்ப்பித்துவிட்டார் நெடுமாறன். சிலப்பதிகாரம் என்றதும் இளங்கோ அடிகளும், இராமகாதை என்றதும் கம்பரும், இராவண காவியம் என்றதும் புலவர் குழந்தையும் நினைவுக்கு வருவது போல பிரபாகரன் என்றதும் நெடுமாறனும் நினைவுக்கு வருகிறார். வருவார்! நன்றி : முகம் ஆகஸ்ட் 2012.
|