மும்பையில் நூல் அறிமுக விழா |
|
|
|
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2012 13:19 |
கடந்த 11-8-12 சனிக்கிழமையன்று மாலை 7 மணிக்கு மும்பை ஹரிராம் அகர்வால் அரங்கத்தில் பழ.நெடுமாறன் எழுதிய, "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலின் வெளியீட்டு விழா
மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் முத்தமிழ்மணி வரவேற்றார். விழாவிற்கு மு. மாரியப்பன் தலைமை தாங்கினார். நூலை வெளியிட்டு உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் பேசினார். நூல் குறித்த ஆய்வுகளை ஞானசேகரன், குமணராசன், சி. நித்தியானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். தமிழ்ச்செல்வன், cதர், இறைஇராசேந்திரன், மைக்கேல், பால்வண்ணன், முருகேசன், இந்திரா, கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாடோடித் தமிழன் நன்றியுரை கூறினார். பழ.நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக மும்பையில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவடைந்த பின்னர் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்காக மும்பை வாழ் தமிழர்கள் சார்பில் ரூ.10,000/-நிதியை மு. மாரியப்பன் அளித்தார். விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நாடோடித் தமிழன் மிகச்சிறப்பாக செய்திருந்தார். விழாவில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து முத்தமிழ்மணி, தமிழ்வேங்கை, சண்முகசுந்தரம் ஆகியோர் வந்திருந்தனர்.
|