தமிழர் தன்மானம் காத்த இன்றைய செங்குட்டுவன் வைகோ! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 அக்டோபர் 2012 11:32
தமிழரைப் பழித்த வடபுல மன்னவர்களான கனகவிசயரை அடக்க இமயம்வரை படை நடத்தி அவர் செருக்கை ஒடுக்கி, இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையிலேயே ஏற்றி தமிழகம்
கொண்டுவந்து பத்தினி தெய்வமாம் கண்ணகிக்கு கோயில் கட்டினான் சேரன் செங்குட்டுவன் என்பது நேற்றைய வரலாறு.
ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சியில் புத்தப் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த தமிழினப் பகைவன் இராசபக்சேவுக்கு எதிராகக் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்த படை நடத்தி, மத்தியப் பிரதேசம் சென்று இந்தியாவெங்கும் பெரும் பரபரப்பை மூட்டிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் போராட்டம் வெற்றிகரமாக நடந்து தனது படையுடன் திரும்பியுள்ளார்.
கொலைகார இராசபக்சே இந்தியாவின் எந்த மூலை முடுக்கு வந்தாலும் எதிர்ப்புக் காட்ட தமிழன் ஒருபோதும் தயங்கமாட்டான் என்பதை நிலைநிறுத்தி தமிழரின் தன்மானங் காத்து, இன்றைய செங்குட்டுவனாக காட்சி தரும் சகோதரர் வைகோ அவர்களுக்கும் அவரது படையினருக்கும் உலகத் தமிழர்கள் சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.