தனிஈழம் கனவு தொலைவில் இல்லை: வைகோ போராட்டம் வரலாறு காணாதது அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 அக்டோபர் 2012 11:36
'இந்தியா, அமெரிக்காவில் உள்ளதுபோல் ஜனநாயக வழிமுறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது.
அந்த தனி ஈழநாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடா கத் திகழும்'' என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் ஆலோசகர் வி. பொன்ராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து வி. பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"மத்தியப் பிரதேச மாநிலத்தில், புத்தமத பல்கலைக் கழகத்துக்கு அடிக் கல் நாட்ட வந்த இலங்கை அதிபர் இராசபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்டுவதற்கு தமிழகத்தில் இருந்து வைகோ தலைமையில் பலர் சென்று அங்கு கைதாகியுள்ளனர். இதுபோன்ற ஒரு போராட்டம் உலக வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை.இ
ந்தப் போராட்டத்தினால், இலங்கையில் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை பிற மாநிலத்தவர்கள்
உணர்ந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலம் முதல், இலங்கைத் தமிழர்களின் அகிம்சை வழி மற்றும் ஆயுதம் ஏந்திய போராட்டங் களின் வரலாற்றை உயர் அதிகாரிகள் திரித்துக் கூறிவருகின்றனர்.
இதனால், பெரும்பான்மையான வட மாநில தலைவர்கள் ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் இல்லை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலம் முதல் இலங்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. எனவே இலங்கை அரசின் மனிதத் தன்மையற்ற செயலையும், ஈழத் தமிழர்களின் நியாயமான போராட் டத்தையும் நாமெல்லாம் ஒருங் கிணைந்து செயல்பட்டு வடமாநிலத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இந்தப் பணியை வரும் பாராளு மன்றத் தேர்தலுக்கு முன்பாக செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், நாட்டின் முக்கியப் பொறுப்புக்கு வரவுள்ள அடுத்த தலைவருக்கும் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை உயர் அதிகாரிகள் திரித்துக்கூறி விடுவார்கள். இதனால் புதிதாக தலைமை ஏற்கும் தலைவரும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும்.
இலங்கைத் தமிழர்களின் நியாய மான போராட்டத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய தேசியத் தலைவரைக் காண்பது அரிதாக உள்ளது. எனவே தமிழக அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல் பட்டு, இலங்கையுடன் இந்தியா மேற் கொண்டு வரும் வெளிவிவகாரக் கொள் கைகளை மாற்றியமைக்க வேண்டும். ஜனநாயக முறையை அமலுக்கு கொண்டுவர இலங்கைக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பொதுத் தேர்தலில் தமிழ் தலைவர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் விதமாக, தமிழர்கள் குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியமர்த்துகின்றனர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு இலங்கை அரசுதான் முக்கிய காரணம். விடுதலைப் புலிகளைத் தவிர, உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் ஒழுக்கம், தியாகம் கொண்ட முப்படை இராணுவத்தைக் கொண்டிருக்கவில்லை.
இந்தியாவை தூண்டில் போல் பயன்படுத்திக் கொண்டு அரசியல், பொருளாதார, இராணுவ உதவிகளை யெல்லாம் இலங்கை பெற்று அனுபவிக் கிறது. அதேநேரம், சீனாவின் தீவிர நட்பு நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் வெளிவிவ காரக் கொள்கை முற்றிலும் தோல்வி யடைந்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல், மிரட்டல் ஆகியவைகளை எதிர்க்க இந்தியாவுக்கு பலம் இருந்தும், வெளிவிவகாரக் கொள்கையில் தோல்வியடைந்துள்ள தால், அண்டை நாடுகள் இந்தியாவுடன் நல்ல உறவுகளை வைத்துக்கொள்வது இல்லை. இதனால் அந்த நாடுகள் சீனாவை துருப்புச் சீட்டாகப் பயன் படுத்தி இந்தியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. மிகப்பெரிய நாடாக இருந்தும் கேலிக்கூத்தான வெளி விவகாரக் கொள்கையை வைத் துள்ளதால், இந்தியாவை இலங்கை வஞ்சித்து ஏமாற்றுகிறது.
ஆசியக் கண்டத்தில் மிகப்பெரிய சக்திகளாகத் திகழும் இந்தியாவும், சீனாவும் எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தின் 60 சதவீத பங்களிப் பைக் கொண்டு இருக்கும். இதனால் இந்தியாவை ஒருபோதும் எதிரி நாடாக சீனா கருதாது. ஆனால், இலங்கையுடன் பொருளாதார உறவுகளைக் கொண் டுள்ள சீனா எதிர்காலத்தில் இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும்.
எனவே, இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், அது உள்நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதேநேரம் இலங்கையில் அரசியல் தீர்வுகாண இந்தியா முயற்சித்தால், அதை ஒரு போதும் சீனா எதிர்க்காது. எனவே இலங்கையில் ஜனநாயகம் மலர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தி, இந்திராகாந்திக்குப் பின் இந்திய அரசு மேற்கொண்டு வரும் வெளிவிவகாரக் கொள்கையை மாற்றியமைக்கச் செய்ய வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக் காவில் உள்ள ஜனநாயக முறையை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும். இது ஒன்றே இலங்கைத் தமிழர்களுக்கு நம்மால் வழங்கக்கூடிய உடனடித் தீர்வாகும். இதன் பின்னரும் இந்த ஜனநாயக முறையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை பூமியில் உள்ள எவராலும் தடுக்க முடியாது.
அதேநேரம், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர் முக்கிய பதவிக்கு வந்து இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி அமைத்துவிட்டால், தனி ஈழம் என்ற கனவு நிறைவேறுவது நெடுந்தொலைவில் இல்லை. இந்த கனவு நிறைவேறி னால், தமிழ்ஈழம் நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும்.
இந்த தேசத்தின் நல்ல மனிதர் களுடன் என் தனிப்பட்ட கருத்துக் களைப் பகிர்ந்துகொள்வதற்காக இதை யெல்லாம் கூறுகிறேன்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.