விஜயராஜ் அவர்களின் உயிர்த்தியாகத்திற்கு தலைவணங்குகிறோம். PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 அக்டோபர் 2012 11:51
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று சேலம் நெத்திமேடு, கலியபெருமாள் கரடு பகுதியைச் சார்ந்த விஜயராஜ் என்ற இளைஞர் அதிகாலை 6.30 மணியளவில்
போஸ் மைதானத்திற்கு வந்தார்.
இலட்சக்கணக்கான தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சே இந்திய மண்ணில் அடியெடுத்து வைக்கக்கூடாது என முழக்கமிட்டுக்கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

உடல் பற்றி எரிந்தாலும் அவருடைய முழக்கம் ஓங்கி ஒழித்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் பதறிப்போய் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மருத்துவமனையில் உயிர்துடிக்கும் தறுவாயில் பின்வரும் வாக்குமூலத்தை அவர் அளித்தார். 'இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகார இராசபக்சே இந்திய தேசத்திற்குள் வரக்கூடாது. இதற்காகத்தான் நான் தீக்குளித்தேன். ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். இராசபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும் சோனியா, மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார் அவர்.
சற்று நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமாரில் தொடங்கி விஜயராஜ் வரை பல இளைஞர்கள் தீக்குளித்து உன்னதமான உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடுஇணை கிடையாது. ஆனாலும் இளைஞர்களிடையே உருவாகி வளர்ந்து வரும் இந்த உணர்வை மனிதநேயம் கொண்டவர்கள் ஆதரிக்க முடியாது. இளைஞர்கள் எதைக்கண்டும் சோர்வு அடையாமல் உறுதியாக இந்திய அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டுமே ஈழத்தமிழர்களை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை உணரவேண்டும்.
விஜயராஜ் அவர்களின் உயிர்த்தியாகத்திற்கு நாம் தலைவணங்குகிறோம்; போற்றுகிறோம். எதற்காக அவர் தனது உயிரை நீத்தாரோ அந்த ஈழத் தமிழர்களின் விடிவிற்காக நாம் தொடர்ந்து போராட விஜயராஜ் பெயரால் சூளுரைப்போம்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.