மற்ற மாநிலங்களின் நிலை எப்படி உள்ளது? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 13:00
"கண்மாய் போன்ற அமைப்புகள் அதிக அளவு காணப்படுவது தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால், அவர்களுக்கு நீர் சேமிக்கும்
அவசியம் இல்லை. மேலும் வயல்களில் தேங்கும் நீரை வெளியேற்றுவதுதான் அவர்களுக்கும் முக்கியமான வேலை. சமீபகாலமாக சிறிய குட்டைகள் அமைத்து, மீன் வளர்க்கும் தொழில் அங்கு வளர்ந்து வருகிறது. கூடிய விரைவில் வட மாநில விவசாயிகள் தென் மாநில விவசாயிகளுக்கு போட்டியாக வளர்ந்துவிடுவர்'' என்கிறார் பழனிச்சாமி.
தீர்வு என்ன?
போர்க்கால அடிப்படையில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டிருக்க வேண்டும். கண்மாய் சங்கிலித் தொடர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
கண்மாய்களைப் போலவே கால்வாய்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தண்ணீர் இடையூறு இல்லாமல் பாயும் வகையில் கால்வாய்களை அமைக்க வேண்டும்.
கண்மாய்களுக்கென என்ற தன்னாட்சி அமைப்பைத் தொடங்க வேண்டு:ம. கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அந்த அமைப்பிடம் கொடுக்க வேண்டு:ம.
சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நீரைச் சேமிக்கும் பாசன முறைகளைப் பரவலாக்க வேண்டு:ம. தேவையான அளவு மானியம் அளிப்பது மட்டுமினறி, அது குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.
நகர்ப்பகுதிகளில் தற்போது பாதி ஆக்கிரமிப்பில் இருக்கக்கூடிய கண்மாய்களை மீட்டெடுத்து அவற்றை மீண்டும் மழைநீர் வடிகாலாக மாற்ற வேண்டும்.
நீர் நிலைகளை ஆக்கிரமிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.