கூடங்குளத்தை நிறுத்தியாக வேண்டும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 13:00
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் எச்சரிக்கை
கூடங்குளம் திட்டத்தின் இரண்டு ஆயிரம் மெகாவாட் நீர் நீர் ஆற்றல் அணு உலைகளில் (வி.வி.ஈ.ஆர்) கமிசனிங் நிலையிலும் சோதனை நிலையிலும் இருக்கும் முதலாவதை ரோஸாட்டம் (Rosatom) என்கிற ரஷ்ய அணுசக்தி நிறுவனம் ஆட்டம்ஸ்ரோயர்ஸ்போர்ட் (Atmostroyexcraft) என்கிற தனது துணை நிறுவனத்தின் மூலம் வழங்கியிருக்கிறது.
இந்தியத் தரப்பில் கூடங்குளம் திட்டம் அணுசக்தித் துறையின் (DAE) கீழ் வருகிற நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.எல் - NPCIL) என்கிற பொதுத் துறை நிறுவனத்திற்கு உரியது. ஒட்டுமொத்தமான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கான பொறுப்பு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உரியதாகும்.
முக்கியமான பொருட்களும் உலையின் பாகங்களும் ஸியோ-போடோல்ஸ்க் (Zio-Podolsk) எந்திரக் கட்டுமான ஆலை என்கிற ரஷ்ய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் 1 மற்றும் 2க்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிறுவனமும் ரோஸாட்டம் நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமாகும். இந்த ஸியோபோடோல்ஸ்க் நிறுவனத்தின் சப்ளை பொருட்கள் ரஷ்யாவின் அனைத்து அணுசக்தி ஆலைகளுக்கும் அத்துடன் இந்தியா, சீனா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ள வி.வி.ஈ.ஆர். ஆலைகளில் அநேகமானவற்றுக்கும் பல வருடங்களாக விநியோகத்தில் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திட்டம் 1 மற்றும் 2க்காக பல வருடங்களாக கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் முக்கியமான பாதுகாப்பு துணைக் கருவிகள், சாதனங்கள், மூலபாகங்கள் மற்றும் பொருட்களும் இதில் அடங்கும்.
கூடங்குளம் அணுமின் திட்டம்1, 2010 ஆரம்பத்தில் செயல்பாட்டைத் துவக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுவரை செயல்படுவதற்கு முந்தைய இறுதிக்கட்ட சோதனையும் கூட முடிந்தபாடில்லை. அணுசக்தித் துறை செயலர் 2013 ஜனவரியில் பேசும்போது அந்த மாதத்திற்குள்ளாக உலை நிச்சயம் செயல்படத் துவங்கும் என்பதில் தனக்கு முழு உறுதி இருப்பதாகக் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.
கூடங்குளத்தில் முதல் உலையை துவக்கவியலாமல் இப்போது வரை இந்திய அணுசக்தி நிறுவனம் திணறுவதைக் கொண்டு பார்க்கும்போது, கூடங்குளத்தில் இருக்கும் இந்திய-ரஷ்ய கமிசனிங் குழு அவர்கள் ஒரு போதும் எதிர்பாராத ஏதோ சில தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
பிரதமர் அலுவலகமும் சரி, அணுசக்தித் துறை அமைப்புகளும் சரி, ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படைத் தன்மை இன்றி இருப்பது பொது மக்களை உண்மையை அறியவிடாமல் தடுத்து விடுகிறது. "வால்வுகள் மற்றும் அதுபோன்ற சில பாகங்களை பொறியாளர்கள் பராமரிப்புக்கென திறந்துள்ளனர். "அதுவே சற்று கூடுதலான தாமதத்திற்கு அணுசக்தித் துறை செயலர் கூறும் காரணம். "நாங்கள் கூடுதல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முனைந்திருக்கிறோம். வால்வுகளும் அதில் அடங்கும். உலையின் ஆரம்ப வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டி வந்தது. இதுதான் தாமதத்திற்கான அடிப்படைக் காரணம் என்று நான் கருதுகிறேன். இந்த வால்வுகள் பாதி இந்தியாவிலும் பாதி ரஷ்யாவிலுமாக வடிவமைக்கப்பட்டவை. அவை உலைக்கு கனகச்சிதமாக இணங்கிச் செயல்படுவதில் தான் சில சுணக்கங்கள் தோன்றியுள்ளன' என்று அணுசக்தி கமிசன் உறுப்பினரான எம்.ஆர். cனிவாசன் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கிறது.
அதிக செலவும் அதிக ஆபத்தும் கொண்ட ஒரு அணு உலை தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே அதன் பாகங்களிலும் சாதனங்களிலும் கோளாறுகளையும் பற்றாக்குறைகளையும் எதிர்கொள்வதென்பது மிகவும் அசாதாரணமான ஒன்று. இந்திய அணுசக்தித் துறை அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம்-நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா-ஆட்டம் ஸ்ட்ரோயெக்ஸ்போர்ட் கூட்டுச் செயல்பாடுகளின் பல மட்டங்களிலும் பெருங்கோளாறுகள் நடந்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
வடிவமைப்புகள் நன்கு பரிசோதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டிருந்தால், பொருட்களின் கொள்முதலும் கட்டுமானமும் தொழில்நுட்ப நிர்ணயங்களின்படி செய்யப்பட்டிருந்தால், உற்பத்தியாளரின் ஆலையில் நடக்கிற பரிசோதிப்பும் தரக்கட்டுப்பாடும் முழுத்திறம்பட்டவையாக இருந்திருந்தால், அத்துடன் நிர்மாணத் தளத்தில் சப்ளைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும் தர உறுதிச் சோதிப்பு அணுசக்தி நிர்ணயங்களின்படி கடுமையாகப் பின்பற்றப்பட்டிருந்தால் கமிஷனிங் நிலையில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியிருக்க முடியாது.
கூடங்குளம் முதலாம் திட்டப்பணி இடத்தில் இருந்து கசியும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மந்தச் செயல்பாட்டு நீண்ட கால வெள்ள அமைப்பு முறை (ல்ர்ள்ள்ண்ஸ்ங் ப்ர்ய்ஞ் ற்ங்ழ்ம் cர்ழ்ங் ச்ப்ர்ர்க்ண்ய்ஞ் ள்ஹ்ள்ற்ங்ம்) அதாவது நீர்ப்பெருக்க முறை கட்டம் 2இல் இருக்கக்கூடிய ரஷ்ய சிறப்பு சோதிப்பு வால்வுகள் கொள்முதல் நிலையிலேயே கோளாறுகளுடன்தான் பெறப்பட்டிருக்கிறது. இப்போது இந்த கடைசித் தருணத்தில் இத்தகைய ஒரு அல்லது ஒன்றுக்குக் கூடுதலான வால்வுகளை தயாரிப்பதற்கு ஒரு மதிப்புமிக்க ஐதராபாத் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய ரஷ்ய வால்வுகளில் ஒன்று அல்லது அதற்குக் கூடுதலானவை ஆரம்ப கமிசனிங் நிலை சோதனைகளின் நிறைவு நிலையிலேயே விரிசல்களைக் காட்டுகின்றன. இதேபோல் மந்தச் செயல்பாட்டு வெப்ப அகற்றுதல் முறையானது (டஐதந) நிர்ணயங்களின் படி செயல்படவில்லை. அதிர்வு மாற்றி காற்று வெப்பப் பரிமாற்றி சிறகு முறை (க்ஹம்ல்ங்ழ் லி ஹண்ழ் ட்ங்ஹற் ங்ஷ்cட்ஹய்ஞ்ங்ழ் ஸ்ஹய்ங் ள்ஹ்ள்ற்ங்ம்) ரஷ்யத் தயாரிப்பாளரின் ஆலையிலேயே ஒருங்குபடுத்தப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரச்சினைகள் அங்கேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இன்னும் கூட பட்டியலிடத்தக்க மற்ற பிரச்சினைகள் இருக்கின்றன. ஆயினும் மேல் கூறியவை தான் உலையின் கமிஷனிங்கை நிறுத்தி வைத்திருக்கக்கூடிய கோளாறுகளில் முக்கியமானவை. உரிய வகையில் செயல்படாத இந்த பாகங்கள் மற்றும் துணையமைப்புகளில் ஏறக்குறைய அனைத்துமே ஸியோபோடோல்ஸ்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும். இவை அனைத்துமே வடிவமைப்பு கடந்த அடிப்படையிலான விபத்துகளின் கீழ் ஆலையின் பாதுகாப்புக்கு மிகமிக முக்கியமானவை.
ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஸியோ-போடோல்ஸ்க் நிறுவனத்தின் கொள்முதல் இயக்குநரான செர்ஜிஷடோவ்வை ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை (எஃப்.எஸ்.பி.) கைது செய்திருந்தது என 2012 பிப்ரவரியில் பெலோனோ ஃபவுண்டேஷன் என்கிற நோர்வே நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்திருந்தது / தரம் குறைந்த மூலப் பொருட்களை மலிவான விலையில் வாங்கி அவற்றை உயர்தர மூலப் பொருட்களாகக் காட்டி, அந்த விலை வித்தியாசத்தை ஷடோவ் சுருட்டிக் கொண்டிருந்தார் என்று எஃப்.எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது. நடந்திருப்பதாகக் கூறப்படும் இந்தக் குற்றத்தினால் எத்தனை அணு உலைகள் பாதிக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் வேலை நிறைவடைந்த கால கட்டத்தைக் கொண்டு பார்த்தால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளில் ரஷ்யாவினால் கட்டித் தரப்பட்ட அணு உலைகள் இத்தகைய தரம் குறைந்த சாதனங்கள் மற்றும் பாகங்களைப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தனது உலைகளில் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட தரச் சான்றிதழ்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு ஏற்கனவே பல்கேரியா ஆடம்ஸ்ட்ரோயெக்ஸ்போர்ட் நிறுவனத்தைக் கேட்டிருக்கிறது. இதேபோல சீனாவின் தியான்வான் ஆலையிலும் இரண்டு வி.வி.ஈ.ஆர்.1000 உலைகள் உள்ளன. பொருட்கள் மற்றும் பாகங்களின் தரம் குறைவாயிருப்பது தொடர்பாக சீனாவும் பல நூறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தரம் குறைந்த பொருட்களின் பயன்பாடு ஒரு அணுப் பேரழிவுக்கு இட்டுச் செல்லலாம் என்று ஆர்மினியாவின் தலைநகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் "புலனாய்வுச் செய்தியாளர்கள்' என்கிற ஒரு அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது. "ஸியோ-போடோல்ஸ்க் நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டிருக்கும் பாகங்கள் நிறுவப்பட்டுள்ள உலைகளில் செயல்பாட்டை நிறுத்திவிட்டு முழு வீச்சிலான சோதனைகளை நடத்த வேண்டியது மிகமிக அவசியமாகும்' என்று ரஷ்யாவின் அரசு சாரா சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் (ஊcர்க்ங்ச்ங்ய்cங்) இணைத் தலைவரான விளாடிமிர் ஸ்லிவ்யாக் சமீபத்தில் கூறியிருக்கிறார். "இல்லாது போனால் ஒரு அணுமின் நிலையத்தில் ஒரு பெரும் விபத்து நிகழக்கூடிய ஆபத்தையும் நிலைமையைச் சீர்செய்வதற்கு பத்து மில்லியன், இன்னும் சொன்னால் நூறு மில்லியன் டாலர் கணக்கில் செலவிட வேண்டிய நிலையையும் வரி செலுத்துவோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என்று அவர் கூறியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் திட்டப்பணிக்கு ஸியோ போடோல்ஸ்க் வழங்கியிருக்கும் சப்ளைகளின் பிரச்சினைகளையும், ஊழல் மற்றும் மோசமான தரம் குறித்த பரவலான குற்றச்சாட்டுகளையும் ஒன்றுசேர்த்துப் பார்த்தால், கூடங்குளத்தின் முதலாம் திட்டப் பணிப் பிரச்சினைகளின் மூலகாரணங்கள் இந்தத் தரம் குறைந்த சப்ளைகள் சம்பந்தப்பட்டவைதான் என்பது புலனாகிறது. தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடமும் என்.பி.சி.ஐ.எல்லிடமும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பலான மேம்போக்கான பதில்களே கிட்டியிருக்கின்றன. ஸியோ நிறுவனம் சப்ளை செய்த பாகங்கள் குறித்த கேள்விக்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்த பதில், "என்.பி.சி.ஐ.எல்லுக்கு சாதனங்களை சப்ளை செய்வதற்கு ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்படுவது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் வராத செயல்முறை' என்பதுதான். இதே கேள்விக்கு என்.பி.சி.ஐ.எல். அளித்திருக்கும் பதில், "ஸியோ போடோல்ஸ்க் நிறுவனத்திற்கு எதிரான எந்த புலனாய்வு விசாரணை குறித்தும் எந்தத் தகவலும் இந்திய அணுசக்தி நிறுவனத்திடம் இல்லை' என்பதுதான். அணுசக்தித் துறையைச் சேர்ந்த இந்த இரண்டு அமைப்புகளுமே இந்த பதில்களில் பொய்களையே கூறியிருக்கின்றன என்பது பின்வரும் உண்மைகளில் இருந்து வெளிப்படுகிறது.
ஸியோ-போடோல்ஸ்க் நிறுவனத்திற்கு 2012 ஜூலை 15 முதல் 18ஆம் தேதி வரையான காலத்தில் அதாவது உள்நாட்டுத் திட்டங்களுக்கும் கூடங்குளம் திட்டப்பணிகள் 1 & 2 உள்ளிட்ட வெளிநாட்டு அணுஉலைத் திட்டங்களுக்கும் தரம் குறைந்த பொருட்களை அனுப்பிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஸியோ-போடோல்ஸ்க்கின் கொள்முதல் இயக்குநரான செர்ஜி ஷடோவ் கைது செய்யப்பட்டு ஐந்தே மாத காலத்திற்குப் பிறகு இந்திய அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலர் ஏ.பி. ஜோஷி தலைமையில் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் குழு பார்வையிடச் சென்றிருந்த செய்தி இந்தியாவில் இருக்கும் ரஷ்யத் தூதரகத்தின் இணையதளத்தில் இருக்கிறது.
மாஸ்கோவில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கும், அதேபோல அங்கிருக்கக்கூடிய என்பிசிஐஎல்/அணுசக்தி துறை அதிகாரிகளுக்கும் ஷடோவ் கைது குறித்தும், ஷடோவின் நடவடிக்கைகளால் கூடங்குளம் திட்டப்பணிகள் 1 & 2 இன் பாதுகாப்பு விடயத்தில் விளையக்கூடிய தீவிரமான பாதிப்புகள் குறித்தும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் உடனடியாக இது குறித்து அணுசக்தி துறைச் செயலருக்கு விளக்கியிருப்பார்கள். அவர்களின் மூலமாக பிரதமர் அலுவலகமும் எச்சரிக்கையூட்டப்பட்டிருக்கும். இத்தனையிருந்தும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் என்.பி.சி.ஐ.எல்லும் ஸியோ-போடோல்ஸ்க் விவகாரத்தை எளிதாக எடுத்துக் கொள்வது போல் நடிக்கின்றன. விவரம் தெரியாதவை போல வேடம் போடுகின்றன.
அச்சமயத்திற்கெல்லாம் மோசமான தரமும் கோளாறுகளும் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பாகங்களும் பொருட்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு யூனிட்டுகளின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டன என்பதோடு முதலாம் யூனிட் இயக்கச் சோதிப்பிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது என்கிற நிலையில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு புயல் எழும்பும் சூழல் உருவாகலாம் என்பதை பிரதமர் அலுவலகமும் அணுசக்தித் துறையும் விரைவாகக் கண்டுகொண்டன என்றுதான் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஒரு மூடி மறைக்கும் திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து நடத்தி, கூடங்குளம் பாகங்களின் சப்ளை விவகாரத்தில் ஒரு பிரச்சினையுமில்லை என்பதான மூடி மறைப்பு நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொள்வதன் மூலம் இந்த சூழலைக் கடக்க பிரதமர் அலுவலகமும் அணுசக்தித் துறையும் திட்டமிட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
இந்தியாவில் சூழலைத் தணிப்பதற்கான ஒரு உத்தியை வகுத்த பின்னர், பிரதமர் அலுவலகம் இந்திய அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலரையும் அவரது குழுவையும் ஸியோ-போடோல்ஸ்க்கை சென்று பார்வையிட்டு வருவதற்கு அனுப்பியிருக்க வேண்டும் என்பதாய் தோன்றுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கோ சட்ட நீதிமன்றங்களுக்கோ இந்த ஊழல் விவரங்கள் தெரியவரும்போது இந்தியாவில் உருவாகக்கூடிய ஒரு சங்கடமான சூழ்நிலையைக் கையாளுவதற்கான செயல்பாட்டு முறையைத் திட்டமிடுவதற்கென அக்குழு ஸியோ-போடோல்ஸ்க் நிறுவனத்தில் மூன்று நாட்கள் செலவிட்டது. 2013 ஏப்ரலில் கூடங்குளம் முதலாம் யூனிட் தொடங்கப்பட்டுவிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு நமது பிரதமர் அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்வதுதான் பிரதமர் அலுவலகத்தின் பிரதான முன்னுரிமை. பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஊழல் விவகாரமெல்லாம் அதன் பின்னர்தான் வரும் போலும்.
கூடங்குளம் முதலாம் மற்றும் இரண்டாம் யூனிட்டுகளின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்ட ஸியோ-போடோல்ஸ்க் நிறுவனத்தின் ஏராளமான தரம் குறைந்த சாதனங்கள், பாகங்கள் மற்றும் மூலப் பொருட்கள் இன்று பிரச்சினைகளை வெளிக்காட்டாமல் போகலாம். ஆனால் உலை சில காலம் இயங்கும் நிலையில், இத்தகைய கோளாறுகளுடனான பாகங்கள் பேரழிவூட்டும் வகையில் செயலிழப்புகளை சந்திக்கலாம்.
இப்போது தொடங்குவதற்கான தயாரிப்பில் மூடப்பட்டு உறையிடப்பட்ட நிலையில் இருக்கும் உலை அழுத்தக் கலனிலும் கூட இத்தகைய பல பாகங்கள் மற்றும் பொருட்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த உலை மறுநிலை கடந்து மின் உற்பத்தி நிலையை எட்டும்போது உள்ளே இருக்கக்கூடிய இந்த மூல பாகங்கள் மற்றும் பொருட்களில் அநேகமானவை கதிர்வீச்சுத் தன்மை கொண்டு விடும், அத்துடன், தரம் அல்லது செயல்பாட்டுக்கென முறையாக சோதிக்க இயலாத சூழல்களுக்குள் அவை சென்றுவிடும்.
இத்தகைய சூழலில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் யூனிட்டின் கமிஷனிங்கும் இரண்டாம் யூனிட்டின் கட்டுமான வேலையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்த ஊழல் மோசடியும் தரம் குறைந்த சப்ளைகளும் உலைகளின் பாதுகாப்பில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கம் குறித்து ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி முடியும்வரை இந்த இரண்டு வேலைகளையும் தொடர்வது பற்றிய கேள்விக்கே இடமிருக்க முடியாது.
இந்த விசாரணையை நடத்தும் குழுவில் அணுசக்தித் துறை, என்.பி.சி.ஐ.எல் மற்றும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இடம்பெறாமல், நாட்டின் பிற அமைப்புகளில் இருக்கக்கூடிய விடயமறிந்த வல்லுநர்களே பெரும்பான்மையாக இருத்தல் அவசியமாகும்.
இந்த ஊழல் முன்வைத்துள்ள குறிப்பான பிரச்சினைகளைக் குறித்து விசாரிப்பதற்கென சிறப்பாக உருவாக்கப்படுகின்ற சர்வதேச அணுசக்தி முகைமையின் நிபுணர் குழு ஒன்றை அழைப்பது குறித்தும் இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எப்ரல் 19ஆம் தேதி வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
நன்றி: தமிழ்ஆழி மே 2013
புதன்கிழமை, 24 ஜூலை 2013 16:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.