முற்றம் காப்போம் - இரண்டாம் கட்டப் பரப்புரைப் பயணம் |
|
|
|
புதன்கிழமை, 01 ஜனவரி 2014 23:12 |
முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான நிரந்தர வைப்புநிதிக்காக இரண்டாம் கட்டமாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் மக்களை நாடி வருகிறார்கள்!. மக்கள் நிதியை அள்ளித் தருமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். 04.12.2013., 05.12.2013.(சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது.
ஆங்காங்கே தொடர்வண்டி நிலையங்களில் கூடியிருக்கும் மக்களிடம் நெடுமாறன் உரையாற்றுகிறார். பயணத்தின் போது நெடுமாறன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவிக்காமல் நிதியாக அளிக்கும்படி அனைவரையும் அவர் வேண்டிக்க்கொண்டிருக்கிறார்.
கீழ்கண்ட தொடர்வண்டி நிலையங்களில் பயணக்குழுவினரை வரவேற்க அந்தந்த ஊர்களில் உள்ள தமிழின உணர்வாளர்கள்,ஈழ ஆதரவு அரசியல் கட்சியினர், மனித உரிமை இயக்கத்தினர் திரளாக கூடி வரவேற்று நிதியளித்து வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். தொடர்புக்கு: கா. தமிழ்வேங்கை, 94421 70011, 78713 57575.
|
செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |