முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பாக இடித்துத் தள்ளிய தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும், முற்றத்தின் பராமரிப்புக்கென நிரந்தர வைப்பு நிதியை தமிழ் மக்களிடம் திரட்டும் நோக்கத்தோடும் கடந்த டிசம்பர் 14,15 தேதிகளில் அய்யா பழ நெடுமாறன் தலைமையில் முதல் கட்ட தொடர்வண்டி பரைப்புரைப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தபோதே இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்திற்கான நாளும் முடிவானது.
அதன்படி 04-01-2014 மற்றும் 05-01-2014 ஆகிய நாட்களில் பரப்புரைப் பயணம் தொடர்ந்தது சென்னை - சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 04-01-2014 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் வெஸ்ட்கோஸ்ட் விரைவுத் தொடர்வண்டி மூலம் பயணம் தொடங்கியது.
அய்யா பழ.நெடுமாறன் தலைமையிலான இப்பயணக்குழுவில் வழக்குரைஞர் பா.குப்பன், வாசன், விஜயபாலன், ந.மு.தமிழ்மணி, கென்னடி, முருகன், இலாரன்ஸ், நாகராஜ், ம.பிரபு, காமராஜ், லலித்குமார், கோ.பாபு, ஆபிரகாம், எழில்.இளங்கோ, பா.ஜோதிநரசிம்மன், வி.பிரபு, பிரிட்டோ, ராஜ்குமார், வீரமணி, வினோத், ஏ.எல். நாராயணன் மற்றும் கா.தமிழ்வேங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயணத்தின் தொடக்க நிகழ்வில் உலகத் தமிழர் பேரமைப்பின் பொருளாளர் சா.சந்திரேசன், எழுகதிர் ஆசிரியர் அருகோ, செளந்திரபாண்டியன், கதிரவன், திரைப்படத் தயாரிப்பாளர் மணிவண்ணன், வழக்குரைஞர் அங்கையற்கண்ணி, அம்பத்தூர் மணி, மு.திருமலை, எழில்குமரன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர் பார்வைதாசன் உள்ளிட்டத் திரளானோர் கலந்து கொண்டு பயணக் குழுவினரை வழியனுப்பி வைத்தனர்.
அரக்கோணத்தில் வழக்கறிஞர் பா.குப்பன் அவர்களின் துணைவியார் விஜயா, ஆசைத்தம்பி, திருமதி. ரூபி, தும்பிக்குளம் விஜயன், அத்திமாஞ்சேரிப்பேட்டை இராசேந்திரன், தாமரைமணாளன், செல்லாத்தூர் மாத்தையா, சஞ்சீவிபுரம் சுரேஷ், வங்கனூர் தண்டபாணி, இராக்கிப்பேட்டை ஆதிமூலம், இராசாநகரம் சிவலிங்கம், பொதட்டூர்பேட்டை பாலன் மற்றும் அவரது நண்பர்கள், தும்பிக்குளம் கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள், அரக்கோணம் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் இளங்கோ மற்றும் வர்கீஸ் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.
வாலாஜாரோட்டில் தோழர் வேணுகோபால், பாவேந்தர் பாரதிதாசன் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சார்ந்த அ.கா.சாந்திபூஷன், த.மு.மு.க.வின் அசன், ம.தி.மு.க.வின் அம்மூர் பிரேமா ஆகியோர் பயணக்குழுவினரை வரவேற்று சிற்றுண்டி வழங்கி வழியனுப்பி வைத்தார்கள். காட்பாடியில் நாம் தமிழர் கட்சியின் மூ.இளையராஜா, ஜெ.வீரமணி, உ.தென்பாண்டியன், பா.திலீபன், கோ.விஜயசங்கர், கா.வேலு, மற்றும் காட்பாடி சுபாஷ் உள்ளிட்டோர் வரவேற்றார்கள்.
சோலையார்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சீ.மணி (எ) குட்டிமணி, என்.தமிழ்ச் செல்வன், கி.அருணா, ம.தி.மு.க.வின் வ.கண்ணதாசன், சிட்டிபாபு, மனித உரிமை இயக்கத்தின் சிவலிங்கம், வழக்குரைஞர் சோலைப்பிரியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்.சிவா, முல்லைவேந்தன், பீமன், நாம் தமிழர் கட்சியின் வாணியம்பாடி ஜெயச்சந்திரன், மேகநாதன், மோகன், தமிழ்த்தேசிய மக்கள் கட்சியின் சிவா, தமிழ் ஆர்வலர்களான வழக்கறிஞர் பி.சண்முகம், ஓய்வுபெற்ற ஆசிரியர் பூபதி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆம்பூர் பன்னீர், லெனின், மா.பெ.பொ.க. வின் திருப்பத்தூர் ஏ.டி.கெளதமன், சக்கரவர்த்தி, தி.மு.க.வின் கே.எம்.பன்னீர்செல்வம், டி.கே.விஜயன், வி.எஸ்.ஆஞ்சி, சத்துணவு சங்க அமைப்புச் செயலாளர் இராம்குமார், பாட்டாளி தொழிற்சங்கம் ஆ.கோபி, தமிழர் தேசிய இயக்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்களான முருகேசன், தமிழ்சிவா, குமார், திம்மராசு, வேலு, பாண்டியன், சேகர், சிவாஜி மற்றும் அருண் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திருப்பத்தூரில் ம.தி.மு.க.வின் இரகுநாத், ஜேசிஸ் அமைப்பைச் சார்ந்த கிஷோர், நல்வழி மருந்தகத்தின் கரிகாலன், மற்றும் அவரது குடும்பத்தினர், குரிசிலாப்பட்டு சண்முகம், தமிழ் உணர்வாளர்களான சம்மந்தம், சுப்பிரமணி, தசரதன், ஓய்வூபெற்ற மின்ஊழியர் ஞானம், தமிழ்த்தேசிய உணர்வாளர்களான வேலு, சிறிதர், இளங்கோ, கலை, அப்பு, கோவிந்தன் மற்றும் இரவி உள்ளிட்டோர் வரவேற்றார்கள். மொரப்பூரில் ம.தி.மு.க வின் சம்பத், ஜெயப்பிரகாசம், பாட்டாளி மக்கள் கட்சியின் பொறியாளர் முருகேசன், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் விஜயன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரமசிவம் மற்றும் பொம்மிடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தவமணி, சிவக்குமார், முருகன், முனிரத்தினம், முனியன், வழக்குரைஞர் சரவணன், சீனிவாசன் மற்றும் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வரவேற்றார்கள்.
பயணத்தின் முதல்நாள் நிறைவு நிகழ்வான சேலத்தில் தணிக்கையாளர் மு.பாலசுப்ரமணியம், ம.தி.மு.கவின் வழக்குரைஞர் ஆனந்தராஜ், தைரியசீலன், இராசிபுரம் ஜோதிபாசு, ஆட்டையாம்பட்டி செந்தில்குமார், அம்பேத்கார் மக்கள் இயக்கம் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் கோ.சீனுவாசன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் மு.மாரியப்பன், தமிழ்த்தேசப் பொதுவுடைமை கட்சியின் பிந்துசாரன், தோழர்கள் வட்டத்தின் காமராஜ், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் சேரன், வழக்குரைஞர் செந்தில்குமார், தலைவாசல் முத்துக்குமரன், பிரதிசன், சிற்பி கிருஷ்ணகுமார், பொறியாளர் சிவா, தமிழர் தேசிய இயக்கத்தின் சிவப்பிரியன், இராசிபுரம் தட்சிணா மூர்த்தி, உள்ளிட்டோர் வரவேற்றார்கள். சேலம் தொடர்வண்டி நிலை யத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் பயண நோக்கம் குறித்து அய்யா பழ.நெடுமாறன் உரை யாற்றினார். பின்பு தனி அரங்கத்தில் செய்தியா ளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.
இரண்டாம்நாள் பயணம் இராமேசுவரத்தி லிருந்து தொடங்குவதால் மாலை சேலத்திலிருந்து 2 வேன்கள் மூலம் 454 கி.மீ பயணித்து மறுநாள் அதி காலை 4 மணிக்கு இராமே சுவரத்திற்கு பயணக்குழுவினர் வந்து சேர்ந்தார்கள். பயணக் குழுவினரை வரவேற்றுத் தங்குவதற்கான ஏற்பாடு களை தோழர் ஜெரோன் குமார் செய்திருந்தார்.
இரண்டாம் நாளான 05.01.2014 ஞாயிறு காலை 8 மணிக்கு இராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வர் விரைவுத் தொடர் வண்டி மூலம் பரப்புரைப் பயணம் தொடங்கியது. தொடக்க நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் க.பரந்தாமன், ஜெரோன்குமார், பெரியார் பேரவையின் நாகேந்திரன், ம.தி.மு.கவின் பாஸ்கரன், சின்னத்தம்பி, கெவிக்குமார், ஜான்சன், செந்தில்குமார், வெள்ளைச்சாமி, நாம் தமிழர் கட்சியின் டொமினிக் இரவி, கண்.இளங்கோ பத்மநாபன், மன்மதன், தம்பாசெல்வம், சட்டக்கல்லூரி மாணவர் நம்.பிரேம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இராமநாதபுரத்தில் ம.தி.மு.கவின் வி.கே.சுரேஷ், சுப்பிரமணி, சுப்பு, நாம் தமிழர் கட்சியின் காயாம்பு, வெண்குலம்ராஜ், சேக்கிழார், பெரியார் பேரவை நாகேஸ்வரன், முத்தலிப்பு, முத்துராமன், செந்தில்ராமு, முருகேசன் உள்ளிட்டோர் பயணக்குழுவினரை வரவேற்று காலைச் சிற்றுண்டி கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
பரமக்குடியில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் பசுமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் என்.கே.இராசன், வைகை பாசன சங்கத்தின் மதுரைவீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜீவா, தமிழ்த்தேசிய பொதுவுடைமைக் கட்சியின் இளங்கோ, சமூக ஆர்வலர்களான சவுந்திரப்பாண்டியன், புலவர் வீராசாமி ஆகியோர் வரவேற்றனர்.
மானாமதுரையில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் அருணா சுந்தர்ராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தங்கமணி, முத்து.இராமலிங்கம், முத்தையா, நாம் தமிழர் கட்சியின் பெரியகருப்பு, உள்ளிட்டோர் வரவேற்றனர். சிவகங்கையில் தமிழர் தேசிய இயக்கத்தின் சோமசுந்தரம், செல்வன் அரசு, நாம் தமிழர் கட்சியின் தமிழ்வேங்கை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கங்கை.சேகரன், விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யு.சி.யின் சகாயம், பி.யு.சி.எல். அமைப்பின் வழக்குரைஞர் கிருஷ்ணன், தோழர் ஜீவா, இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் முருகேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தேவகோட்டை சாலையில் பயணக்குழுவினர் முழக்கமிட்டு பொதுமக்களிடம் கருத்துப் பரப்புரை செய்து நிதி திரட்டினார்கள்.
காரைக்குடியில் மதிமுகவின் சேது. தியாகராசன், க.பாண்டியராசன், ஆட்டோ பழனி, வேங்கைமூர்த்தி, இரா.நடராசன், வழக்குரைஞர் முருகனாந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.சீனுவாசன், இரா.இராசா, சிவாஜிகாந்தி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் சகுவர்சாதிக், சித்திக், நாம் தமிழர் கட்சியின் லேனாமாறன், சாயல்ராம், தமிழ்க்கார்த்திக், தமிழர் தேசிய இயக்கத்தின் சிவபட்டன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
புதுக்கோட்டையில் தமிழர் தேசிய இயக்கத்தின் க.அமுதன், துரை.மதிவாணன், தமிழிசை மன்றத்தின் சுப்பிரமணிய காடுவெட்டியார், நாம் தமிழர் கட்சியின் காவுதின், அருண்மொழித் தேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அருள்மொழி, பேராசிரியர் த.மணி, கதிரேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திருச்சியில் தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் கவித்துவன், கருப்பசாமி, உலகத் தமிழர் பேரமைப்பின் ம.பொன்னிறைவன், ஆத்மநாதன், வழக்குரைஞர் பானுமதி, தமிழர் தேசிய இயக்கத்தின் பழனியாண்டி, அழ.சு.மணி,தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிலவன் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் வரவேற்று நண்பகல் உணவளித்து வழியனுப்பி வைத்தார்கள்.
தஞ்சையில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் அயனாவரம் சி.முருகேசன், கரிகாலன், வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சியின் நல்லதுரை, ம.தி.மு.க.வின் துரை.பாலகிருஷ்ணன், பாஸ்கர், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நா.வைகறை, குழ.பால்ராசு, பழ.ராசேந்திரன், உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் பொறியாளர் கென்னடி ஆகியோர் வரவேற்றனர்.
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் தோழர் சி.மகேந்திரன், இரா.திருஞானம், வழக்குரைஞர் மு.ஆ.பாரதி, முத்து.உத்திராபதி, இரா.திருமலை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் குடந்தை அரசன், மு.முரளி, தளபதி சுரேசு, சே.அசுரன், சா.நாகராசன், சாக் கோட்டை ராசா, இளந் தமிழ்ப் புலிகள் பாசறை யின் ஆ.தியாகராசன், ஜெயசங்கர், வில்லியம், சுரேஷ், கலைமணி, இராசா, நாம் தமிழர் கட்சி யின் வழக்குரைஞர்கள் மணி.செந்தில், வினோபா மற்றும் இரகமதுல்லா, தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சியின் விடுதலைச் சுடர், முரளி, தமிழக இளைஞர் முன்ன ணியின் செந்தமிழ், தமிழ்த் தேச விடுதலை இயக் கத்தின் அய்யா.சுப்ர மணியன், ம.தி.மு.க.வின் டி.ஜி.எஸ்.குமார், கேபிள் செந்தில் உள்ளிட்டோர் வரவேற்றார்கள்.
மயிலாடுதுறையில் பேராசிரியர்கள் இரா. பத்மானந்தன், த.செயராமன், முத்துச்செல்வம், குத்தாலம் ஜெகன்நாதன், மு.சண்முகம், சுகுமாறன், இராசேந்திரன், கி.இரவிச்சந்திரன், ந.கலியபெருமாள், தங்க.செல்வராஜ், நாம் தமிழர் கட்சியின் ஸ்டாலின் மற்றும் முத்து ஆகியோர் வரவேற்றார்கள்.
சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியார் செல்வம், பாக்கியராஜ், அகிலன், சத்தியராஜ், அன்புதாசன், மக்கள் மனிதநேய அறக்கட்டளையின் கோவி.குமார், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத்தின் அன்புராசப்பா, அம்பேத்கர் அரசுப் பணியாளர் அமைப்பின் பெருமாள், தமிழர் தேசிய இயக்கத்தின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்களான இரா.பாலசுப்ரமணியன், கலியமூர்த்தி, ஓவியர் கர்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் நாளின் நிறைவு நிகழ்வான கடலூரில் தமிழர் கழகத்தின் பரிதிவாணன், அசன்அலி, வெண்புறா அமைப்பின் குமார், நாம் தமிழர் கட்சியின் கடல்தீபன், சிவாஜி ரசிகர் மன்றத்தின் கணேசன், தமிழர் தேசிய இயக்கத்தின் கமலக்கண்ணன், இரயில்வே பயணிகள் கூட்டமைப்பின் பண்டரிநாதன், ம.தி.மு.கவின் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரவேற்றார்கள்.
முதல்நாள் சுற்றுப்பயணத்தில் மருத்துவர் முத்துச்செல்வமும், இரண்டாம் நாள் சுற்றுப் பயணத்தில் செ.ப.முத்தமிழ்மணி, முல்லைத் தமிழன், முல்லை நாகராசன் ஆகியோரும் பங்கு பெற்றார்கள்.
இரண்டு நாட்கள் தொடர்வண்டியில் பயணம் செய்த தூரம் 797 கி.மீ. ஆகும். பயண நேரம் 14 மணி. இதில் 23 ஊர்களின் வழியே பரப்புரை செய்த நேரம் 47 நிமிடங்கள் மட்டுமே. இது முதல்கட்ட பரப்புரைப் பயணத்தில் அமைந்த பயணத்தின் தூரம், பயண நேரம், பயண ஊர்கள், காலம் ஆகிய அனைத்திலும் ஒப்பிடும்போது பாதிக்கும் குறைவானதாகும். ஆனால் முதல்கட்டப் பயணத்தில் வைப்புநிதிக்காக மக்களிடமிருந்து பெற்ற நன்கொடை ரூ.80ஆயிரம் ஆகும். ஆனால் 2ம் கட்டப் பயணத்தில் 1,37,700/- ரூபாய் ஆகும். அதாவது முதல்கட்டப் பயணத்தில் திரண்ட ஆதரவை முறியடிக்கும் வகையில் இரண்டாம் கட்டப் பயணத்தில் மக்களின் ஆதரவு பெருகியுள்ளதைக் கவனிக்க முடிந்தது.
ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்திலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தமிழ்த்தேச உணர்வாளர்கள் என ஒன்றுகூடி வரவேற்று உபசரித்து நிதியளித்து வழியனுப்பி வைத்தனர். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பயணத்தின் நோக்கம் குறித்தும், முற்றம் அமைக்கப்பட்டதின் நோக்கம், வைப்பு நிதியின் அவசியம் குறித்தும் அய்யா.பழ நெடுமாறன் செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் விரிவாக விளக்கிப் பேசினார். மாலைகள், பொன்னாடைகள் அணிவிப்பதைத் தவிர்க்கும்படி விடுத்த வேண்டுகோளையும் மீறி அன்பின் மிகுதியால் ஒவ்வொரு ஊர்களிலும் பொன்னாடைகளும், பூமாலைகளும் அய்யாவிற்கு அணிவித்ததைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழ் மக்களின் சொத்தான முற்றத்தைக் காக்க மக்களிடம் சென்று பரப்புரை செய்வதை முதன்மைப் பணியாக எண்ணியே அய்யா நெடுமாறன் அவர்கள் இந்தத் தொடர்வண்டிப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார். நிதி திரட்டுவதை விட மக்களிடம், முற்றம் காக்க ஆதரவைத் திரட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். முள்ளி வாய்க்கால் முற்றத்தின் சிறப்பை விவரிக்கும் வகையிலான துண்டறிக்கைகள் வெளியீடுகள் எனப் பயணத்தில் மக்களிடம் கருத்துப் பரப்பல் பணியே முதன்மையாக இருந்தது. நிரந்தர வைப்பு நிதிக்காக உண்டியலில் காசு போடுவதற்கும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
|