அகதிகள் தாயகம் திரும்ப படும் பாடு! அதிகாரிகள் அடிக்கும் கொள்ளையோ கொள்ளை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:52
தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் சொல்லொணாத் துன்பங் களுக்கு ஆளாகி வருகிறார்கள். இங்கு வாழும்போது தான் அவர்கள் அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாகி அல்லல்பட்டார்கள். இப்போது இங்கிருந்து வெளி யேறித் தங்கள் நாட்டுக்குச் செல் விரும்புகிறவர்களும் அடுக்கடுக்கானக் கொடுமை களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

அகதிகள் முகாம்களில் ஏறத்தாழ எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். வேலூர் கோட்டை, செங்கற்பட்டு சிறப்பு முகாம் போன்ற பல சிறப்பு முகாம்களில் போராளி கள் என்ற சந்தேகத்திற்கு உட் பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். சிறைவாசத்தை விடக் கொடுமையான தண்ட னையை இவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

அகதி முகாம்களுக்கு வெளியே ஒர் இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார் கள். இப்போது இலங்கையில் அமைதி திரும்பியிருப்பதால் தங்கள் நாட்டுக்குச் செல்ல விரும்புகிறவர்கள் அவ்வாறு செல்ல முடியாமல் பெரும் அவதிகளுக்கு ஆளாகி வரு கிறார்கள். சென்னையிலுள்ள குடியேற்ற அதிகாரி அலுவலகத் திற்கு முன்னால் நூற்றுக்கணக் கான ஈழத் தமிழர்கள் கண்ணீர் வடித்தபடியே அமர்ந்து இருப்பதை இப்போதும் காண லாம். இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி இவர்கள் அளித்துள்ள விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. வெளியேற விரும்புகிற ஒவ்வொரு அகதி யும் தன் விண்ணப்பத்தோடு கீழ்கண்ட நான்கு ஆதாரங்களை யும் அளிக்கும்படி வற்புறுத்தப் பட்டுள்ளனர்.

1. குடியிருக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்தின் சான்றிதழ்
2. குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் சான்றிதழ்
3. உணவுப் பங்கீட்டு அட்டை - வீட்டு உரிமையாளரின் தொலைபேசி கட்டண நகல்
4.குடியிருந்ததற்கான சான்று

இந்த நான்கையும் பெறு வதற்கு அகதிகள் படாத பாடுபடுகிறார்கள். காவல் நிலையச் சான்றிதழ் வாங்க வேண்டுமானால் அதற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டி யுள்ளது. இல்லாவிட்டால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இந்த நான்கு சான்றிதழ்களோடு அளிக்கப்படும் விண்ணப்பங் கள் க்யூ”பிரிவு போலிசின் பரிந்துரைக்கு அனுப்பப்படு கின்றன. பிறகு அங்கிருந்து டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப் படுகின்றன. டெல்லியில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்குக் குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகிறது. எவ்வளவு அவசரமான விண்ணப்பங்களாக இருந்தா லும் கூட அவைகள் கீழ்க்கண்ட அதிகாரிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர், சம்பந்தப் பட்ட காவல் நிலைய அதிகாரி, மாவட்டக் காவல் கண்காணிப் பாளர், குடியேற்ற அதிகாரி, க்யூ”பிரிவு காவல் அலுவலகம், தமிழக அரசின் பொதுத் துறை, டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சரகம் இப்படி ஒவ்வொரு அலுவலகத்திற்கும் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதற்குள் மாதக்கணக்காகி விடுகிறது. வெளியேற விரும்பும் ஈழத் தமிழர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்வதற்காக மேற்கண்ட அலுவலகங்களில் தனியான பிரிவுகள் அமைக்கப் படவில்லை. இந்த அலுவல கங்களில் ஏற்கனவே குவிந்துக் கிடக்கும் வேலைகளுக்கு நடுவே இந்த வேலையும் நடக் கிறது. மேற்கண்ட அலுவலகங் கள் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன. விண்ணப்பித் துள்ளவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து இந்த அலுவல கங்களுக்குச் செல்ல வேண்டி யிருக்கிறது. டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக அதிகாரி களையும் சந்தித்து முறையிடு வதற்கு நீண்ட பயணத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. அகதியாக வந்த ஈழத் தமிழர் ஒருவர் இந்த நடைமுறையில் வெளியேறு வதற்கு ரூபாய் இருபதாயிரத் துக்கு மேல் இலஞ்சம் கொடுத்தாலொழிய அவர்கள் வெளியேற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்திற்குப் பயந்து படகுகளில் ஏறி ஆயிரக்கணக் கான ரூபாய் கொடுத்து அங்கி ருந்து தப்பித் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் அகதிகள் வந்து சேர்ந்த கணத்திலிருந்து அதிகார வர்க்கத்தின் அடக்கு முறை களுக்கும் இலஞ்ச ஊழல்களுக் கும் இரையாகின்றார்கள். அவர்கள் கொண்டு வரும் விலையுயர்ந்த பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்தப் பொருட்களை விற்று வயிறு வளர்க்க எண்ணி இங்கு வந்த அவர்கள் பெரும் ஏமாற்றத் திற்கு ஆளாகிறார்கள். அதற்குப் பிறகு அகதிகள் முகாம்களுக்கு அவர்கள் அனுப்பப் படுகிறார் கள். அங்கும் அதிகார வர்க்கத் தின் அத்துமீறிய கெடுபிடி களுக்கு ஆளாகிறார்கள். எதிர்த்துக் கேட்பவர்கள் விடுதலைப் புலிகள் என்று பொய்யான குற்றம் சாட்டப் பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப் படுகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம்கள் சிறை முகாம்க ளாகவே விளங்குகின்றன. தொண்டு நிறுவனங்கள் அகதி களின் துயர் துடைக்க முன் வந்தாலும் அவர்களை முகாம் களுக்குள் அனுப்ப அதிகாரிகள் மறுக்கிறார்கள். மொத்தத்தில் அதிகாரிகள் வேண்டாத விருந்தாளிகளாக அகதிகளை நடத்துகிறார்கள்.

முகாம்களுக்கு வெளியே தங்கள் சொந்தச் செலவில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குபவர்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். சம்பந்தப்பட்ட காவல் நிலயங் களில் அகதியாக வந்தவர்கள் மட்டுமல்ல அவருக்கு வீடு வாடகைக்கு கொடுப்பவரும் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு 1991-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின் காரண மாகச் சொல்லமுடியாத இன்னல்களுக்கு அகதிகள் ஆளானார்கள். காவல் நிலை யத்தில் பதிவு செய்ய இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. வீட்டு உரிமையாளர்கள் இதைப் பயன்படுத்தி வாடகை யைப் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள். அதிகாரிகள் அகதி களிடம் எவ்வாறு இரக்கமற்ற தன்மையில் நடந்து கொள் கிறார்கள் என்பதற்குக் கீழே கண்ட நிகழ்ச்சி சீரிய உதாரணம் ஆகும்.

ஈழ நாட்டின் சிறந்த பத்திரிகையாளரும் வீரவேங்கை பத்திரிகையின் ஆசிரியருமான கோவை மகேசன் தனது துணைவி யாருடன் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார். உடல் நலிவுற்று அவர் காலமானார். அவருடைய துணைவியார் தனது தாயகத்திற்குத் திரும்புவதற்கு முடிவு செய்தார். அப்போது க்யூ”பிரிவு காவல் துறை அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் சென்று அவரைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து படாத பாடு படுத்தினார்கள். வந்த அதிகாரி களின் நோக்கம் அந்த வீட்டி லிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கைப்பற்றுவ தாகவே இருந்தது. அவற்றை யெல்லாம் கொடுத்த பிறகு தான் அவர் அங்கிருந்து வெளியேறுவதற்கு அதிகாரிகள் அனுமதித்தார்கள். இதைப் போல ஒவ்வொரு அகதியும் அதிகாரிகள் வர்க்கத்தினரால் சுரண்டப்படுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 15:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.