கண்ணீர் தேசத்தில் அமைதி நிலவ வேண்டும் போப்பாண்டவர் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:44

இலங்கை கண்ணீரால் நிறைந்துள்ளது; விரைவில் சமாதானம் நிலவவேண்டும் : புனித போப்பரசர்
கடந்த காலங்களில் நிகழ்ந்த இழப்புக்களினால் இலங்கை கண்ணீரால் நிறைந்துள்ளதாக புனித போப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளுமாறு கொழும்பு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பின் கருத்து வெளியிடும்போதே புனித போப்பரசர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வரை எதிரிகளாகக் கருதப்பட்டவர்களுடன் எதிர்காலத்தைக் கட்டிக்காப்பது என்பது கடினமானது. அதைக் குணப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், சமாதானம் ஒன்றே வழியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் சமாதானம் நிலவி மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று புனித போப்பரசர் இதன்போது பிரார்த்தனை செய்துகொண்டார். அத்துடன், இலங்கையர்களுக்கு நலமானெதாரு எதிர்காலம் உருவாக வேண்டும் என்று அவர் ஆசிர்வாதமளித்துள்ளார்.

கத்தோலிக்க தலைமயகமான வத்திக்கான் புனித பீட்டர்பெசிலிகாவில் இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த போதே கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் போப்பரசருக்கும் இடயிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.