நீதிக்கான நெடும்பயணம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:46

29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணமானது வெற்றிகரமாக 08.02.2014 அன்று பதினொராவது நாளாக தொலை தூரத்தைக் கடந்து பெல்ஜியம் நாட்டில் உள்ள சொம்மி-லியூஸ் நகரத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து மழையும் குளிருமாகச் சீரற்ற காலநிலையாக இருப்பதால் நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப் பணியாளர்கள் பல்வேறு வேதனைகளையும் துயரங்களையும் சுமந்து உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடைப்பயணத்தைத் தொடர்கின்றனர்.

நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள மனித நேயப் பணியாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தரும் முகமாக சீரற்ற காலநிலையானபோதும் பிரித்தானியா நாட்டில் இருந்து வருகை தந்து தமிழ் இன உணர்வாளர் ஒருவர் நடைப் பயணத்தில் ஈடுபட்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார். பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகளும் நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப் பணியாளர்களை உரிமையுடன் வரவேற்று அவர்களை உபசரித்து தமது தார்மிக ஆதரவை வழங்குகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் தமக்கு மகிழ்வையும் புதிய உற்சாகத்தையும் தருவதாக நடைப்பயணத்தை முன்னெடுக்கும் மனித நேயப்பணியாளர்கள் அறியத் தந்துள்ளார்கள். நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.