மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்திய அரசு கீழ்க்கண்ட இரண்டு தீர்மானங்களை முன்மொழிய வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு வற்புறுத்தி அறிவித்ததற்கிணங்க
சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் நாம் தமிழர் இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய தேசிய லீக், தமிழ்பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள், தமிழர் நீதிக்கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
1. இந்திய அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானமாக முன்மொழிய வேண்டும்.
அ. இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா. பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆ. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் "இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை' புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ம. நடராசன், பாவலர் இராமச்சந்திரன், வீரசந்தானம், வழக்கறிஞர் குப்பன், திருமுருகன், த. மூர்த்தி, பொழிலன், நிஜாமுதீன், உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டார்கள்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கா.தமிழ்வேங்கை தலைமை தாங்கினார். மற்றும் மக்கள் கல்வி இயக்கத்தின் பேரா. பிரபா.கல்விமணி, விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர். சி.மா.பாலதண்டாயுதம், நூறு பூக்கள் அறக்கட்டளையின் நிறுவனர் கவிஞர். த.பழமலய், தமிழ்த்தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் குபேரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட நிர்வாகிகளான கே.சி.பழமலை, இரா.பாலசுப்ரமணியன், கயமூர்த்தி, விஜயபாலன், மக்கள் பாதுகாப்பு செயலாளர் சி.வீராசாமி, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொருளாளர் மு.நாகராசன், தமிழர் கழகத்தின் கே.ஏழுமலை, தமிழிளைஞர் கூட்டமைப்பின் கோ.பாபு, எழில்.இளங்கோ, பா.சோதிநரசிம்மன், கொ.ப.சிவராமன், பாடல் வளாகம் தமிழநம்பி, திருவள்ளுவர் கல்வி இயக்கத்தின் நெம்புகோல் த.பாலு, கு.பரிதிவாணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் ந.வெற்றிவேல், திருமால், கைவினைஞர் முன்னேற்றக் கழகத்தின் எம்.இராஜவேலு, மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் கோ.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக ஆ.ஆகிலன் நன்றி கூறினார். கடலூர் மாவட்டத்தில் இருந்தும் திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றார்கள்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜி. வீரப்பன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கணேசன், மணிமாறன், நாராயணசாமி, பிச்சை, கா. பாண்டியன், ஐ. பாலன், வெ. குழந்தைவேலு, நிக்கோலசு, கருணாநிதி ரா.ச. சுப. தமிழ்மாறன், சுப. பாஸ்கரன், சி. பாபு, அ. அன்பு, இராமகிரி பெருமாள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மற்ற ஊர்களில் நடைபெற்ற செய்திகள் அடுத்த இதழில் வெளியிடப்படும்.
|