வேல் வீச்சு : கொலைகார தேவானந்தா - தென்பாண்டி வீரன் |
|
|
|
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:56 |
சந்திரிகா அரசில் அமைச்ச ராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சென்னைக்கு வந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தை செய்து விட்டு போயிருக்கிறார். சென்னையிலுள்ள பார்ப்பன ஏடுகள் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இச்செய்தியை வெளியிட்டிருந்தன.
ஆனால் இதே டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி இந்து, எக்ஸ்பிரஸ்,துக்ளக் பத்திரிகைகள் எவ்வளவு மோசமாக எழுதின என்பதை இப்போது நினைவு படுத்த விரும்புகிறோம்.
1.11.1986 அன்று சென்னை சூளைமேட்டில் ஒரு துயர நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர் டக்ளஸ் தேவானந்தா வால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அப்போது ஈ.பி.எல்.ஆா.எப். அமைப்பின் இராணுவத் தளபதி யாக இருந்தார். சூளைமேட்டில் அமைந்திருந்த இவரது அலுவலகத்திற்கு முன்னால் தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஒரு வருக்கும் இவரது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குமிடையே வாய்த்தகராறு மூண்டது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரை அடித்து விட்டார்கள். இதைக்கண்டு பொதுமக்கள் திரண்டு அவர்களை விரட்டு வதற்கு முயன்ற போது அந்த வீட்டிற்குள் ஓடி கதவைச் சாத்திக்கொண்டார்கள். வெளியே கூடிய பொதுமக்கள் அந்த வீட்டின் மேல் கற்களை எறிந்தார்கள். இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த டக்ளஸ் தேவானந்தா கூடியிருந்த அந்தக் கூட்டத்தை நோக்கிச் சுட்டார். இதன் விளைவாக ஒருவர் இறந்தார். அப்போது சென்னை நகரக் காவல் துறை துணை ஆணையாளராக இருந்த வால்டர் தேவாரம் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரைக் கைது செய்தார். டக்ளஸ் தேவானந்தா மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதி மன்றத்தின் முன் அளித்த வாக்குமூலத்தில்,அவர் இந்தக் கொலையை ஒப்புக்கொண்டார். சென்னைச் சிறையில் அடைக்கப் பட்டார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற ஏடுகள் மிகக் கடுமை யான கட்டுரைகளை வெளியிட்டார்கள். தமிழ் நாட்டுக்கு அகதியாக வந்து நமது நாட்டைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற இவரை சும்மா விடக்கூடாது இவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.- கொலைக்குற்றத்தை ஒப்புக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா உட்பட இந்த கொலைகாரர் களுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் ஆவேச மாக எழுதினார்கள்.
கொலைக்குற்றவாளியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா சிறையி லிருந்து வெளியேறி எப்படி தனது நாட்டுக்குப் போனார் என்பது ஒரு மர்மக் கதையாகும். 1987 ஆம் ஆண்டு இராசீவ்காந்தி-செய வர்த்தனா உடன்பாடு செய்யப் பட்டபோது விடுதலைப்புலிகள் அதற்கு எதிராக இருந்தார்கள் என்பதற்காக அவர்களை ஒழிப்ப தற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது. அந்த வேளையில் கொலை குற்றவாளி யான டக்ளஸ் தேவானந்தா மீது ரா” உளவுத்துறையின் பார்வை படிந்தது. இந்தக் கொலை நிகழ்ச்சிக்கு பிறகு டக்ளஸ் தேவா னந்தா மீது ஈ.பி.எல்.ஆர்.எப். இயக்கம் நடவடிக்கை எடுத்து விலக்கி வைத்திருந்தது. அதைப் போல பிளாட் இயக்கத்திலிருந்து இராசன் என்பவர் விலக்கி வைக்கப்பட்டிருந்தார். இந்த இருவரையும் ஒன்று சேர்ந்து ஈ.என்.டி.எல்.எப். என்னும் ஒரு அமைப்பை ரா முன்நின்று உருவாக்கிய போது மூன்று நட்சத்திர அமைப்பு என்றும் இந்த அமைப்பு அழைக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் எடுப்பதற்கு ரா” முன்நின்று உதவியது. கொலைக் குற்றவாளியான அவரைப் பிணை யில் விடக்கூடாது என்று தமிழகக் காவல்துறை வாதிடாமல் அவர் வெளியே வருவதற்கு உதவியது. இதன் விளைவாகப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு கடைசி யில் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூாத்தியுடன் அவர் மிக நெருக்கமானார். இதற்கிடையில் ரா” உளவுத்துறை இராசனை டெல்லிக்கு அழைத்துச் சென்றது. இராசீவ்காந்தி - செய வர்த்தனா உடன்பாட்டை ஆதரிப்பதாக அவர் பகிரங்கமாக அறிக்கை கொடுத்தார். அவருக்கு ஆயுதங்களையும் பணத்தையும் ரா” உளவுத்துறை கொடுத்தது. விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போராடுவதற்காக அவர் அனுப்பப்பட்டார். டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் இருந்தார். இதற்கிடையில் இவர் களுக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்து விட்டார்கள்.
இன்னொரு மோசமான குற்றத்திலும் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டார். சென்னையில் பாரதி நகைக் கடை என்ற பெயரில் நகை வணிகம் செய்து வந்த துரை இரத்தினம் என்பவர் டக்ளஸ் தேவானந்தா, பத்மனாபா ஆகிய வர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வந்தார். ஆனால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது போல டக்ளஸ் தேவானந்தா துரை இரத்தினத்தை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்தார். அதற்கு அவர் இணங்காததன் காரணமாக அவரது மகனை டக்ளஸ் தேவா னந்தா கடத்துவதற்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். குழந்தை யைக் கடத்த முயற்சி செய்ததாக மற்றொரு வழக்கு போடப் பட்டுள்ளது. ஏற்கனவே கொலைக் குற்றத்திற்கு ஆளாகியிருக்கும் ஒருவர் பிணையில் வெளியே வந்த பிறகு இன்னொரு குற்றத்தில் ஈடுபடுவாரானால் அவர் பிணையை ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு காவல்துறை அவரை மீண்டும் பிணையில் விடுவதற்கு ஒத்து ழைத்தது. இங்கிருந்து இலங்கைக்கு அவர் தப்பிச் செல்லவும் உதவியது.
இலங்கைக்குச் சென்று பிரேம தாசாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை பிரேமதாசா எடுத்த பிறகு அவருக்கு டக்ளஸ் தேவா னந்தா தேவைப்பட்டார். அதி லிருந்து தொடர்ந்து சிங்கள அதிகாரப் பீடத்தில் இருப்பவர் களுடன் டக்ளஸ் தேவானந்தா நெருங்கி உறவாடினார். இவரைப் போன்ற துரோகிகள் அவர்களுக் கும் தேவைப்பட்டார்கள். இது தான் டக்ளஸ் தேவானந்தாவின் கடந்தகால வரலாறு.
தமிழ்நாட்டில் கொலைக் குற்றம், குழந்தையைக் கடத்தியக் குற்றம் ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா. இதைப்பற்றி பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளி யிட்ட அதே ஏடுகள் இப்போது டக்ளஸ் தேவானந்தாவுக்குத் துதி பாடுகின்றன. டக்ளஸ் தேவா னந்தா மீது போடப்பட்ட வழக்கு கள் என்ன ஆயின? - நீதிமன்றத் தில் கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர் கொடுத்த வாக்கு மூலம் இன்னமும் தூங்குகிறது. அவர் தமிழ்நாட்டுக்குத் தைரிய மாக வந்து செய்தியாளர்களைச் சந்தித்து புலிகளுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வ தற்குத் தாராளமாக அனுமதிக்கப் படுகிறார். அவர் மீது உள்ள வழக்குகளுக்காக அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்தப் பத்திரிகைகள் எழுதுவதற்குத் தயாராக இல்லை. ஆனால் இராசீவ் கொலை வழக்கில் பொய்யான வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கக் கூடிய பிரபாகரனை உடனடியாக பிடித்து வரவேண்டுமென்று இவர்கள் ஓயாத கூச்சலிடுகிறார் கள். பிரபாகரன் குற்றவாளி அல்ல. அவர் குற்றம் சாட்டப் பட்டவர். அவர் மீது பாயும் இந்தப் பத்திரிகைகள் தமிழ்நாட்டு மண்ணில் ஒரு தமிழரைப் படுகொலை செய்து கையும் களவுமாகப் பிடிபட்டு நீதிமன்றத் தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஒரு நபர் மீது உள்ள வழக்குகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் - அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஏன் எழுத மறுக்கின்றன?. கொலையாளிக்குத் துணை போகும் இவர்கள் பத்திரிகைத் தர்மத்தைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் மன்னிக்க முடியாததாகும்.
|
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 15:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |