29-06-14 அன்று தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முள்ளத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் உரையாற்றினர்.
இயக்குநர் வி. சேகர், இராசேந்திர சோழன், சாத்தப்பன், இராமசாமி, சந்திரமோகன், முல்லைத் தமிழன், சங்கரவள்ளி மணாளன், சக்தி முருகேசன், அழகு தங்கையா, தஞ்சை அ. இராமமூர்த்தி, பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, சேலம் பாலசுப்பிரமணியம், தீனதயாளன், இளம்வழுதி, பன்னீர்செல்வம், செவ்வியன், உதயகுமார், அரங்கநாதன், சேதுபதி, சோழ நம்பியார், கென்னடி, ஜோசப் கென்னடி, அரசேந்திரன், கி.த. பச்சையப்பன், மாரிமுத்து, சுந்தரமூர்த்தி, காஞ்சி அமுதன், தமிழ்மகன், இனியன் சம்பத், பாராங்குசம், கணேசன், வைத்தியலிங்கம், மரு.கோபி, மரு. பாரதிசெல்வம், மங்கையர்செல்வன், அருகோ, இயக்குநர் கெளதமன் உட்பட பலர் தமிழ்த் தேசிய அமைப்புகள் இணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.
பிற்பகல் நடந்த கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணியின் கொள்கைப் பட்டயத்தை பா. குப்பன் முன்மொழிந்தார். அது குறித்த விவாதத்திற்குப்பின் சில திருத்தங்களுடன் அது ஏற்கப்பட்டது.
அமைப்பின் கொடியாக மேற்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் மஞ்சள் நிறமும் கொண்ட கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
|