யாழ் பகுதியில் முழுக் கடையடைப்பு! இராணுவம் - மாணவர்கள் மோதல் |
|
|
|
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 16:16 |
யாழ்ப்பாணம், சூன் 12 : புரிந்துணர்வு உடன் பாட்டினை முழுமையாக அமுல் நடத்த சிங்கள அரசு தவற விட்டதைக் கண்டிக்கும் வகையில் யாழ்க்குடா நாட்டில் முழுமையான கத வடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றி ருக்கிறது.
சிங்கள இராணுவத் தின் அத்து மீறல்கள் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் எனவும்- பனை, தென்னை மரங்கள், மற்றும் அடிப்படை இயற்கை வளங்களை இராணு வத்தினர் அழித்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்க்குடா நாட்டில் மட்டுமல்ல - மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங் களிலும் இந்த கதவடைப்புப் போராட்டங்கள் வெற்றிகர மாக நடத்தப்பட்டு இருப்ப தாக செய்திகள் கிடைத் துள்ளன.
இந்தப் போராட்டத்தின் போது வீதி மறியலில் ஈடு பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விரட்டி அடிக்க சிங்கள இராணுவம் முயற்சி செய்தது. இராணு வத்தினருக்கும் மாணவர் களுக்குமிடையே கடும் வாக்குவாதம் மூண்டது. மிரட்டல்களைக் கண்டு பயப்படாமல் மாணவர்கள் இராணுவத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பினா. யாழ் மாவட்டப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர் கள் அங்கு வந்து அமைதியை நிலைநாட்டினார்கள்.
|
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 16:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |