சமாதான முயற்சி : சிங்கள அரசின் கையில்தான் தங்கியுள்ளது! - அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 16:28 |
'தமிழர் இனப் பிரச்சினையின்அடிப் படைகளைஏற்றுக் கொள்ளாமல், அவை பற்றி பேச்சுக்களைநடத்துவது என்பது அபத்தமானது.அப்படி முயற்சித்தால்திம்புவில் நிகழ்ந்தது போல் பேச்சு வார்த்தைமுறிவடைவது தவிர்க்க முடியாது' என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலண்டன் தமிழ் கார்டியன் பத்திரிகைக்குஅளித்த செவ்வியின்போது இதனைத் தெரிவித்தார்.
சிங்களப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு மக்கள் என்ற கருத்தை வெளியிட்டு வருவது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே பாலசிங்கம்இதனைத் தெரிவித்துள்ளார்.
இரணில் விக்கிரமசிங்காவின் இந்த அரசியல் தத்துவமானது தமிழ்மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை போன்றஅடிப்படைக் கோரிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மறையானதுஎனத் தெரிவித்த அவர், 'தமிழரின் தேசியப் பிரச்சினையின் அடிப் படைகளை எதிர்கொண்டு தீர்த்துவைக்கும்அரசியல் அதிகாரம்ரணில் விக்கிரமசிங்காவிற்கு இல்லை என்பதே எமது கருத்து' எனத் தெரிவித்துள்ளார்.
'போர்நிறுத்த உடன்பாட்டை செம்மையாக நடைமுறைப்படுத்த சிங்கள ஆயுதப்படையினர் ஒத்துழைக்கவில்லை. அத்துடன் அவர்கள்விடுதலைப் புலிகளுடனும்,பொது மக்களுடனும்பகைமை உணர்வுடன்நடந்து கொள்ளுகின்றனர்'எனக் குற்றஞ்சாட்டிய பாலசிங்கம் 'எம்மைப் பொறுத்தவரை போர்நிறுத்தம் வலுப்படுத்தப் படுவது முக்கியமானது. ஏனென்றால் ஒரு பலமான சமாதானத்தின் அடித்தளத்திலிருந்துதான் அரசியற் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும். சமாதானத்தைப் பலப்படுத்தி, போர்நெருக்கடியை படிப்படியாகத் தணிப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டுவது போலத் தெரியவில்லை' எனக் குறிப்பிட்டதுடன், 'இதனால் நாம் ஏமாற்றம் அடைந்து உள்ளோம். எமது மக்கள் சமாதானப்பாதையில் வைத்துள்ள நம்பிக்கையும் இதனால் தகர்ந்து வருகின்றது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்காவின் தற்போதைய பின்வாங்கல் போக்குக் குறித்து கருத்துத் தெரிவித்த பாலசிங்கம் 'வடக்கு கிழக்கில்இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவது போன்ற முக்கிய விடயங்களில் ரணில் விக்கிரமசிங்காகொடுத்த வாக்குறுதியில்இருந்து பின்வாங்குவது எமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கின்றது' எனத் தெரிவித்துள்ளதுடன், 'சனாதிபதிகுமார துங்காவினதும் கதிர்காமரினதும் அழுத்தம் காரணமாக ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் தனது முந்திய நிலைப் பாட்டிலிருந்து பின் வாங்கியுள்ளது என்றுதான் கருதவேண்டியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
நேரடிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப் படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு புரிந்துணர்வு ஓப்பந்த விதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும்,அரச படையினரதும் அரசினதும் இழுத்தடிப்புகளும் அசமந்தப் போக்குமேகாரணம் என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், சமாதான முயற்சிகள் மீண்டும் புத்துயிர்ப்புப் பெற்று, அரசியல் பேச்சுக்கள் உடன் ஆரம்பமாவதற்கு ரணில் அரசு கைக்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
'முதலாவதாக போர்நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்டதுபோல், புனித வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள்,பொதுக் கட்டிடங்களிலிருந்து வெளியேறுமாறு படையினரை அரசாங்கம் பணிக்கவேண்டும். இரண்டாவதாக, பொதுமக்கள் செறிந்துவாழும் நகரங்கள் பட்டினங்களில் அமைந்து இருக்கும் தடைகளையும், காவற்சாவடிகளையும் அகற்றிவிடுமாறு ஆயுதப்படையினரை அரசாங்கம் பணிக்க வேண்டும். மூன்றாவதாக, தமிழீழக் கடற்பரப்பில் எமது மீனவ மக்கள் சுதந்திரமான தொழில் செய்யும் வகையில் சகல தடைகளும் நீக்கப்பட வேண்டும். நான்காவதாக,எவ்வித நிபந்தனைகளுமின்றி எமது விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்கவேண்டும். ஐந்தாவதாக,ரணிலின் அரசாங்கம் வாக்குறுதி அளித்ததுபோல், இடைக்கால நிர்வாகஅமைப்பை உருவாக்குவதுபற்றியே பேச்சுகள்நடைபெற வேண்டும்'.
இவ்வாறு சமாதான முயற்சிகள் புத்துயிர்ப்புப் பெறவும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்குமான வழிவகை குறித்து பட்டியலிட்டுள்ளார் பாலசிங்கம்'நாங்கள் எவ்விதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைகளை கால தாமதமின்றி செயற் படுத்தும் படியே கேட்கின்றோம். அத்துடன்இடைக்கால நிர்வாகத்தைஅமைக்கப் போவதாகரணில் விக்கிரமசிங்கா அளித்த வாக்குறுதியைநிறை வேற்றுமாறு கேட்கின்றோம் எனத்தெரிவித்த பாலசிங்கம்'ஓட்டு மொத்தத்தில் இந்த சமாதான முயற்சியின் எதிர்காலம் சிறீலங்கா அரசாங்கத்தின் கையில்தான் தங்கியுள்ளது' என, தனது நீண்ட செவ்வியின் இறுதியில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
|
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 16:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |