மதுக்கடைகளை மூடு! தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்து!! மூத்த தமிழ்த் தொண்டர்கள் உண்ணாப் போராட்டம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 13:34 |
"தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூடி மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும். தமிழக அரசுப் பணிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் திணிக்கப்படுவதைக் கைவிட்டு தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழிலேயே வழங்கப்பட வேண்டும்.
தமிழ்வழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்' ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனியில் 07-09-2014 முதல், திரு. ஈசுவரவடிவு லிங்கா லிங்கம், திருப்பூர் திரு. க. இரா. முத்துச்சாமி, முதுபெரும் தமிழின உணர்வாளர்கள் இருவரும் காலவரையற்ற உண்ணாப்போரை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13-09-2014 அன்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், துணைத் தலைவர் சி.சி. சாமி, தேனி மாவட்டத் தலைவர் மயிலை ஆர். இரவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் லிங்கா லிங்கம் அடிகளாரைச் சந்தித்து போராட்டத்தை நிறுத்தி மக்கள் போராட்டமாகத் தொடர வேண்டும் என வேண்டிக்கொண்டனர். மேலும் போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், மிரட்டும் வகையிலும் காவல்துறையினர் நடந்துகொள்வதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
|