சென்னை உயர்நீதிமன்ற அடிப்படையில் தமிழகம் முழுக்க நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய சகாயம் ஆய்வுக்குழுவிற்குத் தேவையான விவரங்களைப் பெற்றுத்தர உதவும் வகையில், சென்னையில் 31-10-2014 அன்று தமிழகம் முழுவது:ம உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் கூடி கலந்துபேசி எடுக்கப்பட்ட கூட்டத்தின் தீர்மானங்கள்.
1. சகாயம் ஆய்வுக் குழுவிற்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்றுள்ள கனிமள முறைகேடுகளைக் கண்டறிந்து தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் லஞ்ச-ஊழல் ஒழிப்புச் செயல்பாட்டார்கள் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் விவசாய அமைப்புகள் மக்கள் இயக்கங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் ஆர்வமுள்ள தனிநபர்கள் ஆகியோர்களைக் கொண்டு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
2. சகாயம் ஆய்வுக் குழு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் வருகை தந்து மாவட்டத்திற்கு ஓர் இடத்தில் பொது விசாரணை நடத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் மட்டும் 53 தாதுமணல் குவாரிகள் இருப்பதால் அங்கு மட்டும் கூடுதலாக ஒரு பொது விசாரணை நடத்த வேண்டும்.
3. கடந்த 1990 முதல் இன்றுவரை அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் மற்றும் செயல்பட்டு மூடப்பட்ட அனைத்து கனிமக் குவாரிகள் (தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட் உட்பட) பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனரும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அவர்களும் மக்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
4. அரசின் அனுமதி பெற்ற இடங்கள், அனுமதி பெறாத இடங்கள என எங்கு கனிமவள முறைகேடுகள் நடந்திருந்தாலும் அந்தப் பகுதிகளை அனைத்திற்கும் சகாயம் ஆய்வுக்குழு நேரடியாகப் பார்வையிட்டு பதிவு செய்ய வேண்டும்.
5. மக்களுக்கு பல்வேறு வகையில் கனிம நிறுவன உரிமையாளர்களால் அச்சுறுத்தல்கள் இருப்பதால், கனிமவளக் கொள்கை மிகுதியாக நடந்துள்ள பல்வேறு கிராமங்களுக்கு குறிப்பாக நெல்லை-தூத்துக்குடி-குமரி மாவட்டத்திற்கு மதுரை, கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கடலோரக் கிராமங்களுக்கு சகாயம் ஆய்வுக்குழு நேரடியாக வருகைதந்து மக்களைச் சந்திக்க வேண்டும்.
6. கனிமவள முறைகேடுகளால் ஏற்பட்ட இழப்பீடுகள் பற்றி மதிப்பீடு செய்வதுடன் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயிரிய பன்மயச்சூழல் பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் (ஐங்ஹப்ற்ட் ண்ய்ள்ல்ங்cற் ள்ற்ன்க்ஹ்) குடிநீர் ஆதாரங்கள் அழிந்ததால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மீன்வளம் குறைந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள் இயற்கைக்கு (ப்ர்ள்ங் ர்ச் ங்cட்ர் ள்ஹ்ள்ற்ங்ம் ள்ங்ழ்ஸ்ண்cங்) ஏற்பட்ட பாதிப்புகள், மக்களைப் பிளவுப்படுத்தி மோதவிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள், மக்களைப் பிளவுப்படுத்தி மோதவிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள், ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதிப்புகள் (ள்ர்cண்ஹப் ண்ய்ள்ல்ங்cற் ள்ற்ன்க்ஹ்) பற்றியும் சகாயம் ஆய்வுக் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.
7. கனிமவள முறைகேடுகளைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
8. மக்களின் பொதுச்சொத்தான கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சகாயம் ஆய்வுக்குழுவை வரவேற்கும் முடிவை எடுத்த அனைத்து அரசியல் கட்சிகளையும் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
சகாயம் ஆய்வுக்குழுவை வரவேற்று அறிக்கைகள் பொதுக்கூட்டப் பேச்சுக்கள் என்று மட்டுமில்லாமல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தனது கடைசிமட்ட கட்சி ஊழியர்கள் (தொண்டர்கள்) வரை தெரிவித்து, ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளை சகாயம் ஆய்வுக்குழுவிற்குத் தெரிவிக்கக முன்வரவேண்டும்.
பல்வேறு கனிமவள கொள்ளை பற்றி திரு. சகாயம் இ.ஆ.ப. அவர்களுக்கு அஞ்சலில் அனுப்புவோர் கவனத்திற்கு..
உங்கள் பகுதியில் ஆற்றுமணல் கொள்ளை
தாதுமணல் (கடற்கரை மணல்) கொள்ளை
கிரானைட் கொள்ளை மற்றும் பல்வேறு கனிமவள முறைகேடுகள் நடக்கும் விவரங்கள் உங்களுக்குத் தெரிந்தால்
எந்த மாவட்டம்... எந்த வட்டம்... வருவாய் ஆய்வாளர் (தஒ) பகுதி, கிராம நிர்வாக அலுவலர் (யஆஞ) பகுதி, சர்வே எண்ணைக் கட்டாயம் மறக்காமல் குறிப்பிட்டு (சர்வே எண் தெரியவில்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் முழு அடையாளங்களை அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்டு)
அரசின் அனுமதி பெற்ற இடத்தில் நடந்த முறைகேடு... அல்லது அனுமதி பெறாத இடத்தில் நடந்த முறைகேடு... எந்த வகையிலான கனிம முறைகேடு... என அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு..
திரு. சகாயம் அவர்கள், விசாரிக்க வேண்டும் என்று கோரி அவருக்கே கடிதம் எழுதுங்கள், பதிவு அஞ்சலில் அனுப்புவது மிகவும் சிறந்தது.
அப்படித் தங்கள் அனுப்புவதில் சிக்கல் இருந்தால், அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
தகவல் அனுப்புவதில் தங்களுக்கு ஏதாவது நெருக்கடிகள் இருப்பின் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் கொடுத்து அனுப்பி வைக்கலாம்.
முகவரி :
உ. சகாயம், இ.ஆ.ப., (கனிமவள முறைகேடு ஆய்வுக்குழு) துணைத் தலைவர், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகம், காந்தி மண்டபம் சாலை, சென்னை - 600 025. தொலைபேசி : 044-2445 4034.
U. SAKAYAM I.A.S.,
Gandhi Mandapam Road, Periyar Science and Technology Centre Campus, Chennai - 600 025.
Tamil Nadu, Phone : 044-2445 4034.
|