பிரபாகரன்-60 - மாவீரர் நாள்-25 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மக்கள் வெள்ளம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014 15:30

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 60-ஆவது பிறந்த நாள் விழாவும், மாவீரர் நாள் 25-ஆம் ஆண்டு விழாவும் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 26, 27 ஆகிய நாட்களில் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்பாக நடைபெற்றன.

மரக் கன்றுகள் நடும் விழா :

பிரபாகரனின் பிறந்த நாள் விழாவை யொட்டி பத்தாயிரம் மரக் கன்றுகள் நடும் விழா முனைவர் ம. நடராசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பழ. நெடுமாறன் மற்றும் தலைவர்களும், மாணவர்களும் மாணவிகளும் இவ்விழாவில் திரளாகப் பங்கேற்றனர்.

பிறந்தநாள் விழா :

பிரபாகரன் - 60-ஆவது பிறந்த நாள் விழாவிற்கு சி. முருகேசன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் தீனதயாளன் கொடியேற்றி வைத்தார். பேரா. த. செயராமன் தொடக்கவுரை நிகழ்த்தினார். கோ. இளவழகன் வரவேற்புரை ஆற்றினார்.

காலம் தந்த தலைவன் - கருத்தரங்கம் :

சேலம் மு. பாலசுப்ரமணியம் தலைமையில் ம. சாமிநாதன் முன்னிலையில் புலவர் கி.த.பச்சையப்பன் தொடக்கவுரை ஆற்றினார்.
வீ.இறையழகன், சதா. முத்துக்கிருட்டிணன், தியாக. சுந்தரமூர்த்தி, மரு. முத்துச்செல்வம், எம்.ஆர். மாணிக்கம், கு.செ. வீரப்பன், க. நாகேசுவரன், மாணவர் ஜெயப் பிரகாஷ், ,பா. குப்பன், மு. சாத்தப்பன், க. செளந்திரபாண்டியன், ப. இறையெழிலன், சி.சி. சாமி, சி. பசுமலை, குடந்தைஅரசன், பொன். வைத்தியநாதன்ஆகியோர் உரையாற்றினர்.

தன்னிகரற்ற தமிழன் - கருத்தரங்கம்

பேரா. ம.இலெ. தங்கப்பா தலைமையில் துரை. குபேந்திரன் முன்னிலையில் முனைவர் கே. கணேசமூர்த்தி தொடக்கிவைத்தார்.
முனைவர் அரணமுறுவல், இறை. கயல்விழி, பி. வரதராசன், ஜோசப் கென்னடி, பேரா. இளமுருகன், இயக்குநர் வீ.சேகர், கா. பரந்தாமன், இயக்குநர் வ. கெளதமன், க. திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைவன் படைஎழும் - கொலைஞன் படைவிழும் - கவியரங்கம்

செயபாஸ்கரன் தலைமையில் பேரா. மு. சந்திரன் முன்னிலையில் திருமதி தமித்தலட்சுமி தீனதயாளன் தொடக்கி வைத்தார்;.
கவிஞர் பச்சியப்பன், பொறி. கென்னடி, அரு.கரு. ஆனந்தன், பரணிப்பாவலன், கா. தமிழ்வேங்கை, கவிஞர் இளம்பிறை, கவி. பாஸ்கர், திருமதி. சா.சு. கவிதா, த.ரெ. தமிழ்மணி, மு. இராசா ஆகியோர் பங்கேற்றனர்.

தரணி போற்றும் தமிழன் - கருத்தரங்கம்

முனைவர்அருகோ தலைமையில் புலவர் மதிவாணன் முன்னிலை வகித்தார். முனைவர் கு. வேலன், மா. பொழிலன், மரு. இரா. பாரதிசெல்வன், தி. தாயுமானவன், திருமதி. பானுமதி, இனியன் சம்பத், ந.மு. தமிழ்மணி, விடுதலைவேந்தன், இருதயராசு ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவரங்கம்

கவிஞர் காசிஆனந்தன் தலைமையில் துரை. பாலகிருட்டிணன் முன்னிலையில் முனைவர். ம. நடராசன் தொடக்கவுரை ஆற்றியதோடு, "பிரபாகரன் 60 படத்தொகுப்பு' மற்றும் "காலம் தந்த தலைவன்' கவிதை நூல் ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். மணிவண்ணன் நூற்களைப் பெற்றுக்கொண்டார்.
தஞ்சை அ. இராமமூர்த்தி, இராசேந்திர சோழன், செயபிரகாசம், திருமுருகன் காந்தி, பெ. மணியரசன், ஓவியர் வீரசந்தானம், செ.ப. முத்தமிழ்மணி, மரு. அ. தாயப்பன், சாமி. கரிகாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாவீரர் நாள் - 27-11-14

வியாழன் பிற்பகல் 2.30 மணி :

தலைமை ம. பொன்னிறைவன்

முள்ளிவாய்க்கால் இசைப்பள்ளி ஆசிரியர் திருமதி விசயலட்சுமி மற்றும் மாணவ - மாணவிகள் இசை நிகழ்ச்சி நடத்தினர். எடமேலையூர் சிறுமலர் விசுவநாத் மேனிலைப் பள்ளி மாணவ–மாணவிகள் இலங்கையில் பள்ளிச் சிறுவர்களும், சிறுமிகளும் சிங்கள விமானத் தாக்குதலுக்கு இரையாகி மடிந்த காட்சியினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

பிற்பகல் 4.00 மணி :

தமிழ்க் கொடி நாகராசன்‘கரிகாலன் இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

மாலை 6.00 மணி :

மாவீரர் நாளுக்கான விடுதலைப் புலிகளின் உரை ஒலி பரப்பப்பட்டது. பிறகு தீபச் சுடரை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் ஏற்றி வைத்தார். "புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசன் உட்பட திரளானோர் கூடி நின்று தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.