'உலகத் தமிழர்களுக்கு வழிகாட்டி ஈழத் தமிழர்கள்' - தமிழக அறிஞர் தமிழப்பன்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:23 |
'தம்பி என்று தமிழக உணர்வாளர்களால் உரிமையுடன் அழைக்கப்படும் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் சரியான நடவடிக்கைகளால்தான் இன்று உலகத்தில் தமிழனத்துக்கு ஒரு தலை நிமிர்வு ஏற்பட்டுள்ளது என' உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை நிறுவனர் முனைவர் தமிழப்பனார் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர்களுக்கு தலைநிமிர்வை உண்டாக்கிய தனி ஓரே தமிழன், தலைவர் பிரபாகரன் தான். இதில்தமிழர்களுக்கு எவ்விதமான ஐயமும் இல்லை. தமிழகத்தில்தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் தம்பி என்றால் தலைவர் பிரபாகரன் குறிப்பிடப்படுவார் எனவும்முனைவர் தமிழப்பனார் குறிப்பிட்டு உள்ளார். தமிழீழத் தாயகப் பகுதி எங்கும் பயணித்து ஈழத் தமிழர் நிலைகளை அறிந்து அதனை தமிழக தமிழர் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில்உலகத் தமிழ் அறக்கட்டளை நூலக நிறுவனர் முனைவர்தமிழப்பனார் தலைமையில் தமிழ்ப்பாவை இதழாசிரியர் கருணைதாசன், திருக்குறள் ஆய்வாளர் கவிஞர் துரை. இராமநாதன்,சுற்றுச் சூழலியலாளர் குரு ஆறுமுகம், இயற்கை நல மருத்துவர் நடேச கணேசன் ஆகியோர் வன்னிக்கு வருகை தந்துள்ளனர். இங்கு ஈழத்தமிழர்களின் நிலைமையை பார்க்கும்போது ஈழத்தமிழர்கள்சொந்த தாயகத்தில் 20 ஆண்டுகளாக சிறிலங்காபடைகளால் சிறைவைக்கப்பட்டிருப்பதை நாம்கண்டுள்ளோம். அத்தகைய சொல்லொண்ணாத் துன்பங்களைஎல்லாம் அவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள். இன்று ஒரு சமாதானச்சூழல் ஏற்பட்டிருக்கிறது.இது தலைவர்பிரபாகரன் அவர்களின் வெற்றிகரமான போராட்ட பலத்தால் ஏற்பட்டுள்ளது. இங்கு ஈழத் தமிழர்கள் தமக்குரியசகல உரிமைகளுடனும்வாழ வேண்டும். சமாதானம் என்பது அவர்களது உரிமைகள் இன்றி கிட்டுவதைதமிழர்கள் விரும்பவில்லை.ஈழத் தமிழர்கள்தமிழின் விழுமியங்களை பாதுகாத்து வருபவர்கள்.உலக தமிழர்களுக்கு இவர்களே வழிகாட்டிகளாகஇருக்க போகிறார்கள்என்றும் முனைவர்தமிழப்பனார் தெரிவித்துள்ளார்.
|
புதன்கிழமை, 09 மே 2012 11:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |