தமிழர் தேசிய எழுச்சி மாநாடு மதுரையில் குவிந்த தோழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 11:22

மதுரை தமுக்கம் கலையரங்கில் மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் தமிழர் தேசிய எழுச்சி மாநாடு 25-1-15 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.

மொழிப் போர் பொன்விழா ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல், அன்னை மண்ணில் அந்நியர் சுரண்டலைத் தடுத்து நிறுத்துதல், சமய நல்லிணக்கத்தை நிலைநிறுத்துதல், தமிழ்த் தேசியத்தை வென்றெடுத்தல் ஆகிய நான்கையும் முன்னிறுத்தி இம்மாநாடு தமிழர் தேசிய முன்னணியினரால் நடத்தப்பட்டது.
மதுரை மாநகர தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் வெ.ந. கணேசன் அனைவரையும் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள். சி.சி.சாமி. கு.செ.வீரப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிச்சைக்கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மூத்தத் துணைத் தலைவர் மு. பாலசுப்பிரமணியம் கொடியேற்றி வைத்தார். மூத்தப் பொதுச்செயலாளர் கா. பரந்தாமன் மாநாட்டினைத் தொடக்கி வைத்தார்.

நூல்கள் வெளியீடு

இந்நிகழ்ச்சிக்கு பேரா. கு. வேலன் தலைமை தாங்கினார். பழ.நெடுமாறன் எழுதிய தலைநிமிரும் தமிழ்த்தேசியம் என்னும் நூலினை மரு. பொ. முத்துச்செல்வம் வெளியிட திரு. ஆ. காந்தி பெற்றுக்கொண்டார்.

பழ.நெடுமாறன் எழுதிய தமிழரின் இறையாண்மை என்னும் நூலினை மரு. இரா. பாரதிசெல்வன் வெளியிட திரு.சி. பசுமலை பெற்றுக்கொண்டார்.

பேரா. அறிவரசன் எழுதிய மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்னும் நூலினை பேரா. மா.இலெ. தங்கப்பா வெளியிட்டார். பழ.நெடுமாறன் பெற்றுக்கொண்டார்.

பழ.நெடுமாறன் எழுதிய தினமணிக் கட்டுரைகள் 7 தொகுப்பு நூல்களை பேரா. த. செயராமன் வெளியிட திரு. சுப.உதயகுமார் பெற்றுக்கொண்டார். மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவர்கள், ம. பொன்னிறைவன், பேரா. மு. அறிவரசன், தி.மு. பழனியாண்டி, துரை. மதிவாணன் ஆகியோரும், மாநிலப் பொதுச்செயலாளர்கள், சி. முருகேசன், ந.மு.தமிழ்மணி, சதா. முத்துக்கிருட்டிணன் ஆகியோரும், மாநில இளைஞரணி அமைப்பாளர்கள், கா. தமிழ்வேங்கை, தியாக. சுந்தரமூர்த்தி மற்றும் மாணவரணி அமைப்பாளர் செ. ஜெயப்பிரகாசு ஆகியோரும் தமிழ்த் தேசிய ஆய்வக உறுப்பினர்கள் ச. செளந்திரபாண்டியன், மரு. கோபி, அருள்தந்தை பாலு, ஆகியோரும் மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் பேரா. கோ. கணேசமூர்த்தி அவர்களும், மாவட்டத் தலைவர்கள், ச. இலாரன்சு (வடசென்னை), கி.செ. பழமலை (கடலூர்), இரா. இராஜேசு கண்ணா (திருச்சி மாநகர்), நே. புவனேசுவரன் (திருச்சி புறநகர்). சாமி. தமிழரசன் (நாகை), பொன். வைத்தியநாதன் (தஞ்சை), இர. அரங்கநாடன் (அரியலூர்), சி. செந்தில்நாதன் (கரூர்), வீறாண்டான் (புதுக்கோட்டை), இரா. முருகேசன் (கிருட்டிணகிரி), சி. முத்துச்சாமி (சேலம்), பி. தட்சிணாமூர்த்தி (நாமக்கல்), மயிலை ஆர். இரவி (தேனி), அ.இரா. பாலசுப்பிரமணியன் (மதுரை புறநகர்), போ. இளஞ்செழியன் (நெல்லை) த.சிவகங்கை பாபு (விருதுநகர்), மணி.வ. ஆனந்தராசன் (காஞ்சி), சிவ.சோமசுந்தரம் (சிவகங்கை) ஆகியோரும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் மோ. லில்லிமேரி, சா. இந்திராணி, சு. சுமித்திரா, த. மங்கையர்க்கரசி ஆகியோரும் உரையாற்றினார்கள்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக பழ.நெடுமாறன் நிறைவுரை ஆற்றினார். பொதுச்செயலாளர் வ. கவுதமன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

கலை நிகழ்ச்சிகள்

மாநாட்டில் பேரா. அறிவரசன் அவர்களின் பேத்தி அறிவரசி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சிதம்பரம் மாணவர்கள் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடத்திக்காட்டினார்கள்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.