அன்னை தெரசா மீது சேற்றை வாரி இறைப்பது நன்றிகெட்ட செயலாகும்! பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 14:53 |
அன்னை தெரசா மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன்தான் தொண்டாற்றினார் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது சிறுமைத்தனமாகும்.
அல்பேனிய நாட்டில் பிறந்து, கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெரசா 1950ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து 47 ஆண்டு காலம் தொண்டாற்றி 1997இல் மறைந்தார். ஏழை, எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் அநாதைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்பது ஈடு இணையில்லாததாகும்.
இதன் காரணமாகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு பாரத இரத்னா விருது வழங்கியது. இதைத் தவிர அமெரிக்க குடியரசுத் தலைவரின் பதக்கம், பிலிப்பைன்சு நாட்டின் மக்சேசே விருது, ஆஸ்திரேலிய அரசின் ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது, இங்கிலாந்தின் ஆர்டர் ஆப் மெரிட் விருது, மனித நேயம், சமாதானம், சகோதரத்துவத்திற்கான பல்சான் பரிசு, ஆல்பர்ட் சுவைட்சரின் அனைத்துலக விருது போன்ற பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.
அவர் அமைத்த "பிற அன்பின் பணியாளர்'' என்ற அமைப்பு 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கி மக்களுக்கு தொண்டாற்றுகிறது. எந்த நாட்டிலும் மதமாற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்படவில்லை. ஆனால், இந்திய மக்களுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இறுதிவரை தொண்டாற்றிய தூய அன்னை தெரசாவின்மீது சேற்றை வாரி இறைப்பது நன்றிகெட்ட செயலாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|