"காலத்தை வென்ற காவிய நட்பு' நூல் அறிமுக விழா! தஞ்சை, மதுரை, திருச்சி நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:30

தஞ்சை

பழ. நெடுமாறன் எழுதிய "காலத்தை வென்ற காவிய நட்பு' என்ற நூலின் அறிமுக விழா தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 1-3-2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் சி. முருகேசன் வரவேற்றார். விழாவிற்கு திரு. ஆர். நல்லகண்ணு அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். இவ்விழாவில் சென்னையில் உள்ள இரஷ்ய தூதுவர் அலுவலக கலாச்சாரத் துறையின் துணை இயக்குநர் மிகேயில் கோர்படோவ், இந்திய-இரஷ்ய நட்புறவுக் கழக பொதுச்செயலாளர் பி. தங்கப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரா. திருஞானம், சண்முகம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னாள் நீதிநாயகம் கி. சந்துரு அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மரு. வே.ஜீவானந்தம், புனிதா கணேசன், கோ. இளவழகன் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.

தஞ்சை அ. இராமமூர்த்தி, பேரா. இராமலிங்கம், ஜான். கென்னடி, மு. பாண்டியராசன் ஆகியோர் நூல் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர். பழ.நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். தி. இரத்தினசபாபதி நன்றியுரை ஆற்றினார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட ரூ.800/- பெறுமானம் உள்ள இந்த நூல் விழாவில் ரூ.600க்கு கொடுக்கப்பட்டது. ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

மதுரை

பழ. நெடுமாறன் எழுதிய "காலத்தை வென்ற காவிய நட்பு' மற்றும் "தினமணி கட்டுரைகள் தொகுப்பு-7' ஆகிய நூல்களின் அறிமுக விழா மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் 07-03-2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பி. வரதராசன் வரவேற்றதோடு விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். கம்யூனிஸ்டுத் தலைவர் பி. சேதுராமன், எம்.ஆர். மாணிக்கம், கா. பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முனைவர் வீ. அரசு அவர்கள் "காலத்தை வென்ற காவிய நட்பு' நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். மரு. பொ. முத்துச்செல்வம், திரு. ஆத்மநாதன், மரு. ஏ. கண்ணன், ச. பிச்சைக்கணபதி ஆகியோர் "காலத்தை வென்ற காவிய நட்பு' நூலினைப் பெற்றுக்கொண்டனர்.

"தினமணி கட்டுரைகள் தொகுப்பு-7' நூலை வெளியிட்டு முனைவர் கு. வேலன் சிறப்புரையாற்றினார். திரு. தமிழாலயன், க. சான்மோசசு, வி.எம். பாண்டி, வெ.ந. கணேசன் ஆகியோர் "தினமணி கட்டுரைகள் தொகுப்பு-7' நூலினைப் பெற்றுக்கொண்டனர். பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். தி. ஆ. கிருட்டிணமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட ரூ.800/- பெறுமானம் உள்ள இந்த நூல் விழாவில் ரூ.600க்கு கொடுக்கப்பட்டது. ரூ.350 பெறுமான "தினமணிக் கட்டுரைகள் தொகுப்பு - 7' நூல் இவ்விழாவில் ரூ.300க்கு கொடுக்கப்பட்டது. இரு நூல்களையும் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

திருச்சி

பழ. நெடுமாறன் எழுதிய "காலத்தை வென்ற காவிய நட்பு' மற்றும் "தினமணி கட்டுரைகள் தொகுப்பு-7' ஆகிய நூல்களின் அறிமுக விழா திருச்சி ரவி மினி ஹாலில் 08-03-2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இராசேசுகண்ணா வரவேற்றார். விழாவிற்கு ம. பொன்னிறைவன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். தவத்திரு திருவாவடுதுறை இளைய ஆதீனம் அவர்கள் முன்னிலை வகித்தார். முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் "காலத்தை வென்ற காவிய நட்பு' நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தி.மு. பழநியாண்டி, கி.ஆ.பெ.வி. கதிரேசன் ஆகியோர் "காலத்தை வென்ற காவிய நட்பு' நூலினைப் பெற்றுக்கொண்டனர். பெ. மணியரசன், த. இந்திரசித்து, திருமதி. பானுமதி ஆகியோர் நூலினை ஆய்வு செய்து உரையாற்றினர்.

"தினமணி கட்டுரைகள் தொகுப்பு-7' நூலை வெளியிட்டு வீ.ந. சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

அழ.சு. மணி, இரா. அரசெழிலன், மு.க. கவித்துவன், எஸ்.பி. சோழராசன், நேசம் புவனேசுவரன் ஆகியோர் "தினமணி கட்டுரைகள் தொகுப்பு-7' நூலினைப் பெற்றுக்கொண்டனர். பேரா. கோ. கணேசமூர்த்தி, நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். அ. குமார் நன்றியுரை ஆற்றினார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட ரூ.800/- பெறுமானம் உள்ள இந்த நூல் விழாவில் ரூ.600க்கு கொடுக்கப்பட்டது. ரூ.350 பெறுமான "தினமணிக் கட்டுரைகள் தொகுப்பு - 7' நூல் இவ்விழாவில் ரூ.300க்கு கொடுக்கப்பட்டது. இரு நூல்களையும் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.