உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக் குழுக் கூட்டம் 5-4-15 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு தஞ்சை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். முனைவர் ம. நடராசன், பொதுச்செயலாளர் கோ. இளவழகன், செயலாளர்கள் ந.மு. தமிழ்மணி, தமித்த இலட்சுமி தீனதயாளன், சு. செளந்திர பாண்டியன் மற்றும் சி. முருகேசன், க. பரந்தாமன், கோ. கணேசமூர்த்தி, சதா. முத்துக் கிருட்டிணன், பெ. இராமலிங்கம், ஜோ. ஜான் கென்னடி. வ. தீனதயாளன், இரா. பாரதிச்செல்வன், ஆர்.நல்லதுரை, குழ. பால்ராசு, ம. சாமிநாதன், பி. பாரி, மரு. கோபி உள்பட 50க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாட்டினை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்பின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வைப்புநிதியாக ரூ.1 கோடி திரட்டுவது எனவும் அதற்கு தாராளமாக உதவ முன்வருமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.
2. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நூலகம் ஒன்று கட்டுவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. அதற்கு நிதியையும் நூல்களையும் வழங்க முன்வருமாறு அனைத்துத் தமிழர்களையும், உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.
3. உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாட்டினை 2015ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடத்துவது என உலகத் தமிழர் பேரமைப்பு முடிவு செய்கிறது.
4. உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர் ஒன்றை வெளியிடுவது எனவும் அதற்கு விளம்பரங்கள் அளித்து உதவுமாறு தமிழ்நாட்டுத் தொழில் அதிபர் களையும், வணிகர்களையும் உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.
|