நூல் நயம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:57
நிலவரை - திருநெல்வேலி மாவட்டம்- பதிப்பாசிரியர்- முனைவர் ப. கோமதிநாயகம். தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன், காந்தளகம், 834, அண்ணாசாலை, சென்னை-600 002.

திருநெல்வேலி மாவட்ட நிலவரை மிக சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச் சீமை என்ற புகழுக்கு இந்நூல் மேலும் சிறப்புச் சேர்த்துள்ளது.

இந்நூலில் இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் நிலவரைப் படங்களும், மக்கள் தொகை பற்றிய விவரங்களும் ஆட்சிப்பிரிவு பற்றிய விவரங்களும் தக்க படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் தோற்றம், வெப்பநிலை, மண்வளம், கனிம வளம், மலைவளம், நிலப்பயன்பாடு, நீர்ப்பாசனம், விளைநிலம், கால்நடை, மக்கள் தொகை, கல்வி, சுற்றுலா போன்ற ஏராளமான விவரங்கள் வண்ணமயமான படிவங்களுடன் அளிக்கப் பெற்றுள்ளன.

இதைத் தயாரித்து அளித்த மறவன்புலவு க. சச்சிதானந்தன், பதிப்பாசிரியர் அறிவியல் மணி முனைவர் ப. கோமதிநாயகம் ஆகியோர் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக நெல்லை மாவட்ட மக்களின் பாராட்டுகளுக்கு உரியவர்களாவார்கள்.

தமிழன் வணிகக் களஞ்சியம்- ஆசிரியர் கா. கலை,நூல் விற்பனை தமிழன் கலைக்கூடம் பதிப்பகப் பிரிவு, எண் 3, 5வது தெரு, அவ்வை நகர், விருகம்பாக்கம், சென்னை- 600 092.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைப் பற்றியும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களின் சிறப்பு பற்றியும் அரசு துறைகள் பற்றிய முழு விவரங்களையும் மற்றும் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் வணிகத் துறையில் சிறப்புற்று விளங்கிவரும் தமிழக வணிகர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் தமிழன் வணிக களஞ்சியம் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

முதன் முறையாக தமிழில் இத்தகைய நூல் வெளிவந்திருப்பது பாராட்டுதற்குரியதாகும். புள்ளிவிவரங்களில் மட்டுமல்ல புத்தகத்தின் வடிவமைப்பும் நமது உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறது.

வந்தேறிகளின் வேட்டைக்காடாகிக் கிடக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், உலகத் தமிழர்கள் அனைவரும் கைகோர்த்து நிற்பதற்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நூலின் தொகுப்பாசிரியர் க. உதயம் அறிய சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கும் இந்த அரும் பணியில் அவருடன் இருந்து தொண்டாற்றியவர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

குறிப்பு: நூல் நயம் பகுதிக்குப் பிரதிகள் அனுப்புவர்கள் இரண்டு பிரதிகள் அனுப்புமாறு வேண்டுகிறோம்.
புதன்கிழமை, 09 மே 2012 12:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.