பெங்களூரில் நூல் வெளியீட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:16
பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலின் அறிமுக விழா 29-4-12 அன்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரா. இராமமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவைத் தொடங்கிவைத்து திருமதி. பார்வதி நெடுமாறன் விளக்கேற்றி வைத்தார்.
இராசுமாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். நூல் அறிமுக உரையை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் நிகழ்த்தினார். பேரா. பால் நியூமென் சிறப்புரையாற்றினார். பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. மீனாட்சிசுந்தரம், என். சந்திரசேகரன், அ. நல்லதுரை, வல்லரசு, இராமானுஜம், இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


நூலின் பிரதிகளை ரூ.25,000/- வீதம் கொடுத்து ஜோசப் தனசிங், தாமோதர சவுத்ரி, சந்திரசேகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஆசிரியர்கள் ஜோதி கார்த்திகா, சோபா ஜெயராஜ், டாக்டர் சேகர், சட்டக்கல்லூரி மாணவர்கள் செல்வக்குமார், இலட்சுமி நரசிம்மன், திரைப்பட இயக்குநர் கணேசன், பத்மநாதன், வைரவேல், ரிதிஷ்டா ஆகியோரும் மற்றும் பலரும் மேடையில் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.