இராமநாதபுரத்தில் நூல் அறிமுக விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 17:00
2-6-12 அன்று இராமநாதபுரத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் அறிமுக விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் கேணிக்கரை டி.எஸ். மகாலில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தமிழ்த் தேசிய வட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. நாகேசுவரன் தலைமை வகித்தார். தமிழர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகிகள் செளபா. முகைபுல்லா, வழக்குரைஞர் மு.த. முருகேசு, தமிழ் மாணவர் பேரவை மாவட்டச் செயலாளர் எஸ்.எம். கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலாளர் சி.பசுமலை வரவேற்றார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய நூலினை பேராசிரியர் வேலன் வெளியிட அதனை ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே எம். பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். விழாவில் தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் கா. பரந்தாமன், தமிழ்ப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை. திருவள்ளுவன், தீவு தமிழர் கூட்டமைப்பின் நிர்வாகி செ. ஜெரோன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். முருகபூபதி, ம.தி.மு.க. கிழக்கு ஒன்றியச் செயலாளர் பேட்ரிக். நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் டோம்னிக் ரவி, மாவட்டச் செயலாளர் கண். இளங்கோ உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். இறுதியாக முகிலன் நன்றி உரையாற்றினார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.