உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் நூல் - பேரா. அய்யாச்சாமி பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:26
பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்' நூலைப் பார்த்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அவ்வளவு அழகாக, தெளிவாக, சுவை குன்றாமல், ஆற்றொழுக்கான நடையில் எழுதியிருக் கிறார். பிரபாகரனும் அவரது தோழர் களும் ஆற்றியுள்ள அருஞ்சாதனை களைக் கூறுகின்ற நூல் அல்லவா? அவர்களின் எழுச்சி நூலையும் தொற்றிக் கொண்டதில் வியப்பில்லையே? அதிலும் காலமெல்லாம் உலகத் தமிழர் நல்வாழ்வுக்கும் ஈழத்தின் ஏற்றத்திற்கும் பாடுபட்டுவரும் தாங்கள் அல்லவா அதனை யாத்திருக்கிறீர்கள்?
பிரபாகரன் மட்டுமேயல்லாமல் அவருடன் இணைந்து போரிட்ட எத்தனையோ தோழர்களின் வரலாற் றையும் தந்திருக்கிறீர்கள். தான் மட்டுமே வீரராகத் திகழ்வது எளிது, தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உயிரைத் துச்சமாக மதிக்கும் உணர்வு ஊட்டக்கூடிய ஒரு தலைவனுடன் ஒப்பிடும்போது. இல்லை யேல் ஒற்றைத் துப்பாக்கியுடன் பள்ளித் தோழர்கள் ஓரிருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு தொடங்கிய பிரபாகரன் முப்படைகளை நிறுவி வல்லரசுகளின் கூட்டுச்சதிக்கு எதிராக நின்றிருக்க முடியுமா?

படையைத் திரட்டினால் மட்டும் போதுமா? யானையிறவு, வன்னி, ஓயாத அலைகள் போன்ற வரலாறு படைத்தப் போர்க்களங்கைைளச் சந்தித்து வெற்றி வாகை சூட வேண்டுமெனில் எவ்வளவு கடுமையான பயிற்சி அளித்திருக்க வேண்டும்? வெளிப்படையாகத் தங் களைக் காட்டிக் கொள்ளவே இயலாத நிலையில் படைக்கலப் பயிற்சியா? கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது. கட்டுப்பாடு கடைக்கப்பட்டது. அவை யாவும் எப்படி நிகழ்ந்தன என்பதையும் தெளிவாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். இலங்கையின் சிங்களப் படையை மட்டுமல்லாமல் இந்திய வல்லரசுப் படைகளையும் புறங்கண்ட வீரத்தை மெய்சிலிர்க்கும் வகையில் படம் பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.

கரும்புலிகள் என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. அதற்கு அவர் தெரிவித்த காரணங்கள் என்று எத்தனை அரிய செய்திகள். உலக வரலாற்றில் முதன் முதலாகத் தற் கொலைத் குண்டில் தன்னையே தகர்த் துக்கொண்டு எதிரியின் ஆயுதக் குவிப்பை எரித்துச் சிதைத்த கேப்டன் மில்லரின் தியாகம் பொன்னெழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டியது. மில்லர் மட்டுமா, ஒவ்வொரு புலியும் சயனைடு குப்பிகளைக் கழுத்தில் கட்டிக் கொண்டல்லவா களத்திற்குச் சென்றார் கள்? அதைக் கடித்து உயிரைத் துறக்க அவர்கள் தயங்கியதாக வரலாறே இல்லையே.

இத்தனைக்கும் மேலாக அந்தப் படை வீரர்களுக்கு அவர் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடு, ஒழுக்க நெறிகள், கட்டுநாயகா விமான நிலையத்தைத் தகர்க்கும்போது மக்களில் ஒரு உயிரைக்கூட கொல்லக்கூடாது என்பதற்காகக் காட்டிய பொறுமை, யாழ்ப்பாணக் கோட்டையில் மாட்டிக் கொண்ட சிங்கள வீரர்களின் உயிரைக் காத்துத் தருமாறு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இலங்கை அதிபர் சந்திரிகா விடுத்த வேண்டுகோளை ஏற்றுச் செயல்படுத்திய மனிதாபிமானம், கொடுக் கும் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அப்புறம் காலில் போட்டு மிதித்து விடு வோம் என்றில்லாமல் தனக்கும் தன் மக்களுக்கும் தீங்கு பயக்கும் வாக்குறுதி களை எக்காரணம் கொண்டும் எத்தனை அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியும் தரமாட் டேன் என்னும் நெஞ்சுரம், தன் நாட்டி னருக்கு விடுதலையை விட்டால் வேறு நிவாரணம் இல்லை என்று தெளிந்து அது ஒன்றே குறிக்கோள் என்று கடைப்பிடித்த உறுதி, அதற்காக எது நேரினும் தாங்கிக் கொள்வேன் என்று நின்ற தறுகண்ணாண்மை - அனைத் தையும் சான்றுகளுடன் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.

போர் முனையில் மட்டுமின்றி ஆட்சி நடத்துவதிலும் திறமை மிக்கவர் என்பதை பிரபாகரன் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார். தனது நெடிய போராட்டத்தின் விளைவாக மீட்டெடுக் கப்பட்ட தமிழீழப் பகுதியில் அரசியல் துறை காவல்துறை, நிதி நிர்வாகம், நீதி ஆகிய நான்கு முக்கிய துறைகளை உருவாக்கி, அங்கு முறையான நல் லாட்சி நடைபெற வேண்டுமென்ப தற்காகச் சட்டங்களையும் நீதி நிர்வா கத்தையும் உருவாக்கி, கல்வி, மருத்துவம் முதலியவற்றைக் கவனிப்பதற்கான அமைப்புகளை உருவாக்கி, மகளிர் மேம்பாடு, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, முதியோர் நலம் பேணல் போன்றவற்றைக்கூடக் கருத்தில் எடுத்துக்கொண்டு உலகோர் மூக்கில் விரலை வைத்து வியக்கும் அளவிற்கு நல்லாட்சி நடத்தி வரும் சீர்மையை எடுத்தியம்பியுள்ளீர்கள்.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் கிளிநொச்சியில் நடை பெற்றபோது, பிரபாகரன் கலந்து கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற, நேர்காணலை வெளியிட்டுப் பல உண்மைகளை உலகுக்கு அறிவித் துள்ளீர்கள். அற்றை நாள் தலைமைய மைச்சர் இந்திராகாந்தி அம்மையார் விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக் கைக்கு எல்லா வகையிலும் துணை நின்றார். பிரபாகரன் நேதாஜியைப் போன்ற விடுதலை வீரர் என்று முன்னாள் தலைமையமைச்சர் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெங்கட் ராமன், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலிய எண்ணற்றவர்கள் பிரபாகரனையும் அவரது இயக்கத்தை யும் போற்றிப் பாராட்டியுள்ளார்கள். முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண் டஸ் தமிழீழக் கோரிக்கையை ஆதரித் திருக்கிறார். அப்படியிருக்க இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தடம் புரண்டு போய்விட்ட அவலத்தைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

பலமுறை வதந்திகள் கிளப்பப் பட்டும் உயிரோடு இருந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டி. அவர் மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ் கிறார் என்று உறுதிபடக் கூறியிருக் கிறீர்கள். அவர் மீண்டும் வந்து போர் முரசத்தை ஒலிக்கும் வேளையில் உலகம் தன் தவற்றை உணர்ந்து கொண்டு வரவேற்பு நல்கும் என எதிர் பார்ப்போம். தமிழ் மக்களின் கண்களை திறக்கும் விதமாகவும் உலகத்தின் மனச் சாட்சியைத் தட்டி எழுப்பும் விதமாகவும் தாங்கள் படைத்திருக்கும் இந்த

ஒப்பற்ற வரலாற்று நூல் தமிழர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.