இல்லந்தோறும் இருக்க வேண்டிய நூல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:28
தாங்கள் ஆக்கி அளித்துள்ள "பிரபாகரன் தமிழரின் எழுச்சி வடிவம்' என்கிற அரிய பெரிய நூலைப் படித்தேன். அண்ணன் பிரபாகரன் அவர்கள் தமிழ் மரபில் தோன்றிய மாவீரர். அவரும் அவர் தோழர்களும் நிகழ்த்திய வீர நிகழ்வுகளை இந்நூல் என் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்நூலைப் படிக்கும்போது மனித உணர்வுகள் அனைத்தும் என் உள்ளத்தில் எழுந்து படர்கிறது.
மானத்துடனும் வீரத்துடனும் விவேகத்துடனும் வாழ நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய மிக அரிய நூல்.

பொழுதுபோக்குக்காகப் படித்துவிட்டு வைத்துவிடும் நாவல் போன்ற நூலான்று இந்நூல். இந்நூல் தமிழருக்கான பாடநூல் மட்டுமன்று அனைவருக்குமான பாடநூல் ஒவ்வோரு தமிழனின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு தமிழனும் மிக அவசியமாக படிக்க வேண்டிய நூல்.

தன் கடும் உழைப்பால் பல ஆண்டுகள் முயற்சி செய்து இந்நூலை உருவாக்கி அளித்துள்ள தங்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.

- கோ. அழகியநம்பி, சென்னை.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.