திருப்பூரில் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:34

கடந்த 10-6-2012அம் தேதியன்று திருப்பூர், தமிழீழ ஈகியர் அரங்கில் புத்தெழுச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது. பழ. நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' எனும் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழித் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், கணக்காயர் மு. பாலசுப்பிரமணியம் அவர்களும், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் க. பரந்தாமன் அவர்களும் நூல் பற்றிய ஆய்வுக் கருத்துரை நிகழ்த்தினர்.

தமிழக ஒடுக்கப்பட்டேர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் மொழிப்போர் ஈகி. ப. பெரியசாமி, வழக்குரைஞர்கள் கனகசபை, ஆனந்தன், நிட்மா தலைவர் அகில் க. ரத்தினசாமி, ஆல்வின் க.வெ. கிரி.ஓ.கே.டெக்ஸ் எம். கந்தசாமி (காந்திய மக்கள் இயக்கம்), நாம் தமிழர் கட்சி செல்வம், மறுமலர்ச்சி அரிமா நாகராஜ், பெரியார் திராவிடர் கழக சு. துரைசாமி, கொங்கு தமிழர் முன்னணி பழ. ரகுபதி ஆகியோர் நூலின் மாண்பு பகரும் மணித்துளி உரைவீச்சு நிகழ்த்தினர். மனித நேயப் பாசறை மு. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நூலின் ஆசிரியர் பழ. நெடுமாறன் அவ்ாகளின், நூலின் ஆக்க நோக்கம் விளக்கிய கருத்துப் பேருரை கூடியிருந்த இளைஞர்களுக்கும், ஏனைய தமிழ்த் தேசிய ஆர்வலர்களுக்கும் இயல்பான எழுச்சிப் பெருமித உணர்வுகளை வாரி வழங்கியது.

இந்நிகழ்வின் தொகுப்பு நிலைகளை வழக்குரைஞர் செல்வி. சி. மாதவி, அழகு தமிழில் சொல்லி அருமை சேர்த்தார். ஏராளமான தமிழர்கள் மிகவும் ஆர்வமிடுக்கோடு நூலினை வாங்கி அய்யா அவர்களின் கையொப்பம் பெற்று மகிழ்ந்தனர். நிறைவாக மு. மனோகரன் நன்றி நவில கருத்தரங்கம் இனிதே நிறைந்தது.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.