புதுக்கோட்டையில் நூல் அறிமுகம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:25
சனி மாலை 6 மணிக்குப் புதுக்கோட்டைத் தமிழர் இலக்கியப் பேரவையின் சார்பில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்'' எனும் நுால் அறிமுக விழா
சின்னப்பா பூங்கா - திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக அண்மையில் எழுப்பப்பெற்ற திருவள்ளுவர் சிலைக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் நாஞ்சில் சம்பத் அவர்களும் மாலை அணிவித்து மலர்துாவி வணங்கினர். சீ.அ. மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். துரை.மதிவாணன் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். ம.தி.மு.க மாவட்ட செயலாளர் க.சந்திரசேகரன், இ.கம். மாவட்ட செயலாளர் த.செங்கோடன், அருண்மொழி, பா.ம.க தரணிஇரமேசு, நாம் தமிழர் கட்சி செயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இரா.சுப்பிரமணியன்(காடுவெட்டியார்) நுலை வழங்க திருகுறள் கழகத்தலைவர் பா.இராமையா பெற்றுக்கொண்டார்.
நுல் அறிமுக உரையாக ஞானாலயா பா.கிருட்டிமூர்த்தி, த.தே.இ. பொதுச்செயலாளர் கா.பரந்தாமன், ம.தி.மு.க கொள்கை விளக்கச்செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உரையாற்றிய பின் நுாலாசிரியர் பழ.நெடுமாறன் ஏற்புரை வழங்கினார். க.அமுதன் நன்றி நவின்றார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.